ஈராக்கில் உள்ள மோசூல் என்னும் நகரே ஐ.எஸ் தீவிரவாதிகளின் கோட்டை. அதுவே அவர்களின் அசைக்க முடியாத தலை நகரமாக இவ்வளவு காலமாக இருந்து வந்தது. ஆனால் ஈராக் படைகளோடு இணைந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் , மோசூல் நகர் மீது பாரிய தாக்குதலை தொடுத்துள்ளது. இதனூடாக ஊடறுத்து, அவர்கள் முன்னேறி வருவதாகவும். பாரிய தாக்குதலை தாக்குப் பிடிக்க மூடியாது ஐ.எஸ் இயக்கம் பின்வாங்கி வருவதாகவும் தற்போது வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே ரஷ்யா விமானங்கள் பாரிய தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளது, அவ்வியக்கத்திற்கு பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது. ரஷ்ய விமானத் தாக்குதல் என்பது அன் நாட்டு விமானப்படையால் நடத்தப்படுகிறது. அன் நாட்டின் விமானப்படையினர் மிகவும் இரக்கமற்றவர்கள் என்றும். பாரிய குண்டுகளை அவர்கள் பொழிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. பொதுமக்கள் இருந்தாலும் இருக்காவிட்டாலும் அவர்கள் ஐ.எஸ் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தியபாடாக இல்லை. இதனால் ஐ.எஸ் இயக்கம் பல அழிவுகளை சந்தித்து தோல்வியின் விழிப்பில் உள்ளது. என் நேரமானாலும் ஐ.எஸ் இயக்கம் முற்றாக கலைக்கப்படும் சாத்தியம் உள்ளது என்கிறார்கள்.
-http://www.athirvu.com