தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்!

political prisonersஅரசியல் கைதிகளில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினரை விடுவிப்பது தொடர்பாக எதிர்வரும் புதன் கிழமை அறிவிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதனடிப்படையில், சிறு சிறு குற்றங்களுக்காகவும், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதவர்களுக்கும், சந்தேசத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கும் விடுதலை அளிக்கப்படவுள்ளது.

மேலும், சிறு குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், வழக்குத் தாக்கல் செய்யப்படாத அரசியல் கைதிகள் ஆகியோரை முன்னுரிமை அடிப்படையில் முதலில் விடுதலை செய்வதெனவும் முடிவெடுக்கப்பட்டது.

அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களத்தில் தேங்கியுள்ள கோப்புக்களை முன்னகர்த்துவது விஷேட மற்றும் ஏனைய நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை துரிதப்படுத்துவது புணர்வாழ்வு செயற்பாட்டுக்குட்படுத்துவது, பொது மன்னிப்பளிப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அமைச்சர் சாகல ரட்நாயக்க, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள் குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிவஞான சோதி, சட்டமா அதிபர் உட்பட்ட பலர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

-http://www.tamilwin.com

TAGS: