ஒலிம்பிக்கில் போட்டிகளில் பங்குபற்றியவர்களுக்கு நேர்ந்த அவலம்! அனைவரையும் கைது செய்யுமாறு உத்தரவு

Robert-Mugabeஒலிம்பிக்கில் போட்டிகளில் கலந்துகொண்ட சிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத கோபத்தால் போட்டியில் கலந்து கொண்ட சிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் சிம்பாப்வே நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி 31 வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர். எனினும், எவ்வித பதக்கமும் பெற்றுக்கொள்ளவில்லை.

அத்துடன், எந்த வீரரும் 8 வது இடத்திற்கு குறைந்து வரவில்லை. இந்நிலையில், அந்நாட்டு ஜனாதிபதி ரொபர்ட் முகாபே பதக்கம் வெல்லாத ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட 31 வீரர் வீராங்கனைகளையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டு உள்ளார்.

சிம்பாப்வே தேசிய இடைக்கால அதிகார சபை வெளியிட்டு உள்ள தகவலின் படி ஹராரே விமான நிலையம் வந்து இறங்கும் ஒலிம்பிக போட்டியில் கலந்து கொண்ட அனைத்து ஜிம்பாப்வே வீர வீராங்கனைகளை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

குறித்த அனைவரும் நாட்டின் பணத்தை வீணத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர்கள் நாட்டிற்காக எந்த தியாகமும் செய்ய தயாராக இல்லை எனவும் சிம்பாப்வே ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை, வடகொரிய வீரர்கள் மீது அதிருப்தியில் இருந்த அந்த நாட்டு ஆட்சியாளர் பதக்கம் வெல்லாத வீரர்களை தண்டிக்கும் விதமாக, அவர்களை நிலக்கரி சுரங்கங்களில் வேலைக்கு அமர்த்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com