ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு: சுட்டுக் கொல்லப்பட்ட வடகொரியா துணைப்பிரதமர்!

north_korea_flag_001கடுமையான சட்டங்கள் பிறப்பிப்பதில் பெயர் போன வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோங், தன்னை அவமதிக்கும் வகையில் அமர்ந்திருந்ததாக வடகொரியாவின் துணைப்பிரதமர் கிம் யாங் ஜின்னை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி வடகொரியாவின் துணைப்பிரதமர் கிம் யாங் ஜின் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஆலோசனை கூட்டத்தில் தூங்கியதாக கல்வித்துறையின் உயர் அதிகாரி ஒருவரையும், அவருடன் இன்னொரு அதிகாரியையும் சுட்டுக்கொல்ல ஜனாதிபதி உத்தரவிட்டதாகவும், அதன்படி அவர்கள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இருவருரையும் பொது இடத்தில் வைத்து விமானத்தை சுட்டுத் தள்ளக்கூடிய துப்பாக்கியைப் பயன்படுத்தி கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

இந்த அதிர்ச்சி தகவல் மறைவதற்குள் கிம் ஜோங் உன்னை அவமதித்ததாக கூறி வடகொரியாவின் துணைப்பிரதமர் கிம் யாங் ஜின் கொல்லப்பட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கிம் ஜோங் உன் கலந்து கொண்ட நாடாளுமன்ற கூட்டத்தின்போது, துணை பிரதமர் கிம் யாங் ஜின் மோசமான நிலையில் உட்கார்ந்திருந்து, நாட்டின் தலைவருக்கு அவமரியாதை தந்ததாக கூறப்படுகிறது.

விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆனதாகவும், இதன் படி கடந்த யூலை மாதம் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த தகவலை அந்த நாட்டு அமைச்சகம் ஒன்றின் செய்தி தொடர்பாளர் ஜாங் ஜூன் ஹீ வெளியிட்டுள்ளார்.

-http://news.lankasri.com