மஹிந்தவை தாக்க அதிரடியாக முற்றுகையிட்ட தமிழர்கள் – பின் கதவு வழியாக தப்பிய மஹிந்த!

மலேசிய விஜயத்தினை மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக மலேசிய தமிழர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை அறிந்த விடயமே.

குறித்த ஆர்ப்பாட்டம் சிறிதாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நேற்று பூதாகரமாகவே வெளிப்படுத்தப்பட்டது.

பொது மக்கள் எத்தகைய போராட்டத்தில் ஈடுபட்டாலும் மலேசிய அரசு தன்னைக் காப்பாற்றும் என நம்பியிருந்த மஹிந்த ராஜபக்சவுக்கு ஏமாற்றம் தரக்கூடிய வகையில் இந்த போராட்டம் அமைந்து விட்டது.

மஹிந்தவின் கொடும்பாவி எரிக்கப்பட்டும் அவரது படத்தினை எரித்து மிதித்தும் பல வகையிலும் மலேசிய தமிழர்கள் ஆக்ரோஷமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை சிங்கள ஊடகம் ஒன்று மலேசியாவில் மறைந்திருக்கும் புலிகள் அமைப்பினரே மலேசிய தமிழர்களை ஒன்றிணைத்து மஹிந்தவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும், எனினும் மலேசியா அரசாங்கம் மற்றும் அந்நாட்டு பொலிஸார் விடுதலைப் புலி ஆதரவாளர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை எனவும் செய்தி வெளியிட்டிருந்தது.

-http://www.tamilwin.com

என்றாலும் குறித்த ஆர்ப்பாட்ட காணொளிகளின் அடிப்படையில் மலேசிய நாட்டு பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு எந்தவித இடையூறும் விளைவிக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

இதேவேளை மஹிந்த ராஜபக்ச தங்கியிருந்த உணவகத்தையும், இலங்கை அரசின் தூதரகத்தையும் மலேசிய தமிழர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

உணர்ச்சி மிக்க தமிழர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்தவை தாக்கவும் தயாராக இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை பகிரங்கமாகவே ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கவும் செய்து அவர் வெளியில் வரும் வரையில் காத்திருந்தார்கள்.

இதன் காரணமாக முன் வழியாக மஹிந்த வெளியே செல்வது சாத்தியம் இல்லாததால், பின் கதவு வழியாக மஹிந்த ஒரு வெள்ளை நிற BMW காரில் ஏறிச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்துள்ளாக கூறப்படுகின்றது.

நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த போதும் மஹிந்தவுக்கு எதிராக ஆக்ரோஷமான இந்த ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் வெறுமனே வேடிக்கையாளராக செயற்பட்டதனை அவதானிக்க முடிந்ததாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

TAGS: