500 படகுகள்..! கடலில் மூழ்கி பலியான அகதிகள்: தீவிர மீட்பு பணியில் இத்தாலி கடற்படை

refugees boat sinkலிபியா கடற்பகுதியில் அகதிகள் படகுகள் விபத்துக்குள்ளானதில் 6 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

மேலும், பலர் இறந்திருக்க கூடும் என இத்தாலி கடற்படை ஹெலிகொப்டர், கப்பல் மூலம் யாராவது கடலில் தென்படுகிறார்களாக என தீவிரமாக தேடி வருகிறது.

உள்நாட்டு போர், வறுமை உள்ளிட்ட பலக் காரணங்களால் மக்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி அகதிகளாக படையெடுத்து வருகின்றனர். இதில் வட ஆப்பிரிக்காவில் இருந்து இத்தாலிக்கு அதிக மக்கள் கள்ளப் படகுகளில் வருகின்றனர்.

அந்த படகுகளில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றப்படுவதால் படகு நடுக்கடலில் விபத்துக்குள்ளாகி அதிக அளவில் உயிர்ச்சேதமும் ஏற்படுகிறது.

ஐக்கிய நாடுகளில் அகதிகள் நிறுவனத்தின் தகவல் படி, கடந்த ஆகஸ்ட் மாதம் வரை ஐரோப்பாவின் தென் எல்லைப் பகுதியில் 1,15,000 மக்கள் அகதிகளாக நுழைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று லிபியா கடற்பகுதியில் 500 அகதிகள் படகுகளை இத்தாலி கடற்படையினர் மீட்டுள்ளனர். இதில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 6 பேரின் உடலையும் அவர்கள் மீட்டுள்ளனர்.

மேலும், யாராவது கடலில் தத்தளிக்கிறார்களா என கண்காணிக்க ஹெலிகொப்டர், 2 படகுகளில் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.

-http://news.lankasri.com