அழகு சாதன தயாரிப்புக்காக ஏற்றுமதியாகும் கழுதை: தடை விதித்த மேற்கு ஆப்பிரிக்க நாடு

donkeyமாமிசம் மற்றும் அழகு சாதன தயாரிப்புக்காக மேற்கொள்ளப்பட்டு வந்த கழுதைகளின் ஏற்றுமதிக்கு மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கழுதை ஏற்றுமதி வர்த்தகம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதை தொடர்ந்து கழுதைகளின் எண்ணிக்கை குறைந்ததால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் மட்டும் 80 ஆயிரத்துக்கும் அதிகமான கழுதைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இது கடந்த ஆண்டு 27,000 என இருந்தது. தென் கிழக்கு நைஜீரியாவில் விற்கப்படும் கழுதை கறிக்கு இந்த நைஜர் முதன்மை ஆதாரமாக உள்ளது.

ஒரு கழுதையின் தற்போதைய விலையானது 100 ல் இருந்து 145 டொலர் வரை உயர்ந்துள்ளது.

நைஜர் பகுதியில் இருந்து கழுதை தோல் பெருமளவிற்கு சீனாவிற்கு அனுப்பப்படுகிறது. அங்கு மருத்துவ டானிக், வயதை குறைத்து காட்டும் கிரீம்கள் என பல்வேறு பொருட்களுக்கு இந்த தோல் பயன்படுத்தப்படுகிறது, அப்ரோடிசியாக் மருந்துகளில் பயன்படுத்த கழுதை தோலில் இருந்து ஜலடின் என்னும் பொருள் எடுக்கப்படுகிறது.

சமீப வருடங்களில், இந்த ஜலடினின் விலை ஒரு துண்டு நான்கு டொலரிலிருந்து ஐம்பது டொலர் வரை உயர்ந்துள்ளது. நைஜரின் அண்டை நாடான புர்கினா ஃபாசோ கழுதை ஏற்றுமதிக்கு கடந்த வாரம் தடை விதித்தது.

கழுதை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டாலும் சரக்குகள் மற்றும் குழந்தைகள் ஏற்றிச் செல்ல கழுதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com