ஜனாதிபதியாக முடிசூடப் போவது யார்? வெளியானது கருத்துக்கணிப்பு

அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடையப் போவதைத் தொடர்ந்து வருகிற நவம்பர் மாதம் 8ம் திகதி தேர்தல் நடைபெறுகிறது..

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் யார் வெற்றி பெறுவார் என ஏற்கனவே கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது பெரும்பாலானவர்கள் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை தெரியவந்துள்ளது.

CNN, Reuters, Washington Post போன்ற பல நிறுவனங்களும் கருத்துக்கணிப்பை வெளியிட்டன, இதில் பெரும்பாலானவை டொனால்டு டிரம்புக்கு ஆதரவாகவே உள்ளது.

CNN கருத்துகணிப்பில் டொனால்டுக்கு 45 சதவீத ஆதரவும், ஹிலாரிக்கு 43 சதவீத ஆதரவும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Reuters செய்தி நிறுவன கருத்துகணிப்பில் டொனால்டுக்கு 40 சதவீதமும், ஹிலாரிக்கு 39 சதவீதமும் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhiteHouse Watch என்ற அமைப்பு வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் டொனால்டுக்கு 40 சதவீதமும், ஹிலாரிக்கு 30 சதவீத ஆதரவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Washington Post வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு மட்டும் டொனால்டு டிரம்பை விட ஹிலாரிக்கு சற்று அதிக ஆதரவு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், இருவரின் பிரச்சாரத்தை தொடர்ந்து நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

-http://news.lankasri.com