‘உயிருடன் தின்று விடுவேன்’ ஒபாமாவை வசைபாடிய ஜனாதிபதி மீண்டும் அதிரடி

filipஅமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை வசைபாடிய பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அடுத்து தமது நாட்டில் உள்ள ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகளை உயிருடன் உங்களை தின்று விடுவேன் என கடுமையாக சாடியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதியை கடும் சொற்களால் வசைபாடி ஒட்டுமொத்த ஊடகங்களின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியவர் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோடிரிகோ டுட்டர்டே.

இந்த சம்பவத்தை அடுத்து ஹிலாரி கிளிண்டன் முதல் உலகின் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், தமது வார்த்தை தெரிவுக்கு வருத்தம் தெரிவித்தார் ரோடிரிகோ டுட்டர்டே.

இந்த நிலையில் தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் பெருகிவரும் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகளின் மேல் ஜனாதிபதி ரோடிரிகோ டுட்டர்டேவின் பார்வை பதிந்துள்ளது.

லாவோஸ் நாடில் நடைபேரும் ஆசிய உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ரோடிரிகோ, அவர்கள் தற்போது என்ன செய்கிறார்களோ அதற்கான பலனை அனுபவிப்பார்கள். நேரம் வரும்போது அவர்களை பொதுமக்கள் முன்னிலையில் வைத்து நான் உயிருடன் தின்று விடுவேன் என ஐ.எஸ் ஆதரவாளர்களை கடுமையாக சாடியுள்ளார்.

ஜனாதிபதி ரோடிரிகோ கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவது இது முதன்முறையல்ல. ஒபாமாவை திட்டுவதற்கு முன்னர், போப்பாண்டவர் பிரான்சிஸ் பிலிப்பைன்ஸ் வந்த போதும் வாகன நெரிசல் ஏற்படுத்தியதாக கூறி கடும் வார்த்தைகளை பயன்படுத்தி வசை பாடினார்.

மட்டுமின்றி இவர் மேயராக பதவி வகித்து வந்த காலகட்டத்தில் அவுஸ்திரேலிய பெண் ஒருவரை சில சமூக விரோதிகள் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவத்தில், மேயருக்கு மட்டுமே பலாத்காரம் செய்யும் உரிமை உண்டு என இதுவரை நினைத்திருந்தேன். அவர்கள் முந்தி விட்டனர், என ஆபாசமாக பேசி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

கடந்த வாரம் ஜனாதிபதி ரோடிரிகோவின் பிறந்த நகரான Davao நகரில் அமைந்துள்ள சந்தை ஒன்றில் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும் 68 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்தே ஐ.எஸ் மீது கடுமையான விமர்சனத்தை ரோடிரிகோ முன்வைத்துள்ளார்.

-http://news.lankasri.com