இரகசிய மதமாற்றத்தைத் தடுக்கும் பரிந்துரை

jagirஇஸ்லாத்துக்கு    மதம்  மாறும்  ஒருவர்    ஏழு   நாள்களூக்குள்    அதைத்  தன்    வாழ்க்கைத்   துணையிடம்     தெரிவிக்க   வேண்டும்     எனச்  சட்டம்    கொண்டு   வரப்பட    வேண்டும்.

கணவன்,    மனைவி    இருவரில்   ஒருவர்   இஸ்லாத்துக்கு  மதம்    மாறி    மற்றொருவர்    மாறாதிருக்கும்போது     எழும்   பிரச்னைகளுக்குத்    தீர்வுகாண  மலேசிய   பெளத்தம்,   கிறிஸ்துவம்,    இந்து    சமயம்,    சீக்கிய  சமயம்  ,  தாவோயிச  ஆலோசனை   மன்றம் (எம்சிசிபிசிஎச்எஸ்டி)     முன்வைத்துள்ள   நான்கு   பரிந்துரைகளில்   இதுவும்   ஒன்று.

“இது   கணவன் -மனைவி  இருவரில்    ஒருவர்   இரகசியமாக    மதம்   மாறி    அது   பற்றிக்  குடும்பதுக்குத்    தெரியப்படுத்தாமல்   இருக்கும்  நிலைக்கு   முடிவு  கட்டும்”,  என   எம்சிசிபிசிஎச்எஸ்டி    உதவித்   தலைவர்  ஜாகீர்   சிங்    கூறினார்.
“மதம்    மாறியதை     மதம்    மாறாதிருக்கும்     வாழ்க்கைத்  துணையிடம்   தெரிவிப்பதைக்  கட்டாயமாக்க   சட்டம்   வேண்டும்  என்கிறோம்.  அதையும்  ஏழு   நாள்களுக்குள்   தெரிவிக்க   வேண்டும்”,  என்றாரவர்.

ஜாகீர்  எம்சிசிபிசிஎச்எஸ்டி   சட்ட    வாரியத்தின்    இணைத்   தலைவருமாவார்.