சொந்த நாட்டிலே போர் சூழல் காரணமாக பல உயிர்கள் கொன்று குவிக்கப் பட்டதுடன், ஈழத் தமிழர்கள் உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருந்தது கவலைக்குரிய விடயமாக இருந்தாலும், உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அனைத்து நாடுகளிலும் தமிழ் மொழியையும், தமிழ் கலை கலாச்சாரத்தையும் நிலை நாட்டி இருக்கிறார்கள், இது அனைவருக்கும் பெருமைக்குரிய விடயமே!
ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசியல் பக்கங்களில் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க, தமிழக மக்கள் பலர் கவன ஈர்ப்பு போராட்டங்களும், உண்ணாவிரதமும், தன்னை தானே எரித்து கொண்ட செயற்பாடுகளும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதற்காகவும் நீதி கிடைப்பதற்காகவும் இயன்ற அளவு போராடி இருக்கிறார்கள் என்பதை மறுக்கவோ மறக்கவோ முடியாது.
“இன்று தமிழகத்தில் விவசாயி முதல் அனைவரும் காவேரி நீர் கர்நாடகா கொடுக்காததால் எவ்வளவு கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்பது தெரியும்.
இந்த விடயத்தை அறிந்த புலம் பெயர்ந்த தமிழர்கள் கூட இது வரைக்கும் எந்த குரலும் கொடுக்காதது ஏன்? புலம் பெயர்ந்து இருக்கும் பல “தமிழ் அமைப்புகளும் நிறுவனங்களும்” இந்திய தூதரத்துக்கு முன்னால் ஒரு ஆர்ப்பாட்டம் கூட செய்யாதது ஏன்?”
இப்படி ஈழத்துப் பெண்ணை மணம் செய்த ஒரு தமிழக இளைஞன் தனது கவலையை லங்காசிறிக்கு தெரிவித்து இருந்தார்.
-http://www.tamilwin.com

























