இரட்டை கோபுர தாக்குதல் விவகாரம்: ரஷ்ய ஜனாதிபதியிடம் ரகசிய ஆவணங்கள்?

september-11அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டைகோபுர தாக்குதல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் சில ரஷ்ய ஜனாதிபதியிடம் இருப்பதாகவும் அவை அமெரிக்க அரசையை கவிழ்க்க போதுமானது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி அல் கொய்தா தீவிரவாத அமைப்பானது அமெரிக்காவில் தொடர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் தொடர்பாக சில முக்கிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புதின் தெரிவித்துள்ளார்.

இந்த ஆவணங்களை வெளியிட்டால் அது தற்போதைய அமெரிக்க அரசையே கவிழ்க்க போதுமானது என கூறப்படுகிறது. மட்டுமின்றி அந்த ஆவணங்களில் குறிப்பிட்ட தாக்குதலுக்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் உள்நாட்டு சதி என்பதை தெளிவு படுத்தும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அரசும் அங்குள்ள உளவுத்துறையும் ஒன்றிணைந்தே இந்த மிகக்கொடிய தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதியிடம் இருக்கும் ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றனவாம்.

இருப்பினும் இந்த தாக்குதல்களுக்கு அப்போதைய புஷ் அரசுடன் நேரடி தொடர்பு உள்ளதா என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் அதில் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து தகவல்களும் கடந்த 2015 ஆம் ஆண்டு ரஷ்யாவில் இருந்துய் வெளியாகும் பிரவ்தா எனும் சஞ்சிகையில் வெளியாகியுள்ளதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட தாக்குதலை திட்டமிட்டது அப்போதைய புஷ் அரசாங்கம் எனவும் அதை செயல்படுத்தியது நிழல் உலக குழு எனவும் அந்த சஞ்சிகையில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் பார்வையும் சர்வதேச தீவிரவாத குழு மீது திரும்ப இதுவே காரணம் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

2001 செப்டம்பர் 11 ஆம் திகதி நடந்த இந்த தாக்குதலில் சுமார் 2996 பேர் கொல்லப்பட்டனர். பொதுமக்களில் 6000 பேர் படுகாயமடைந்தனர். 10 பில்லியன் டொலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com