ஐ.நாவின் தூதரான ஐ.எஸ் தீவிரவாதிகளின் பாலியல் அடிமையாக இருந்த இளம்பெண்

nadiaஐ.எஸ் தீவிரவாதிகளின் பாலியல் அடிமையாக இருந்த ஈராக் இளம்பெண் ஐ.நா.வின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈராக் நாட்டைச் சேர்ந்த நாடியா முரத் (23) என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாதிகளால் பாலியல் அடிமையாக பிடித்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அங்கிருந்து தப்பி வந்த நாடியா பாதுகாப்பு கவுன்சிலில் கூறியதாவது, நான் அங்கிருந்து பலமுறை தப்பிக்க முயன்றுள்ளேன். ஆனால் முடியவில்லை, அவ்வாறு தப்பிக்க முயற்சிக்கும் பெண்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்வார்கள். என்னையும் நினைத்து கூட பார்க்கமுடியாத வகையில் பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்கள்.

இது தவிர என் கண் எதிரே, எனது தாய் மற்றும் 6 சகோதரர்களையும் ஐஎஸ் தீவிரவாதிகள் கோரமான முறையில் கழுத்தறுத்து கொன்றுள்ளனர்.

இதனால், மனமுடைந்த நான் தற்கொலை செய்துகொள்ள விரும்பவில்லை. அவர்களே என்னை கொன்று விடவேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். அந்தளவுக்கு கொடுமைகளை அனுபவித்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த கொடுமையான இடத்திலிருந்து, தப்பி ஓடிவந்த நாடியா ஜேர்மனியில் அடைக்கலம் புகுந்தார். இந்நிலையில், தற்போது ஐநாவின் மனித கடத்தலுக்கு எதிரான நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

-http://news.lankasri.com