சீனாவில் தினசரி மக்கள் படும் பாடு!

chinaஉலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் அங்குள்ள மக்கள் தினசரி அல்லல் படுவது தொடர்கதையாகி உள்ளது.

3.7 மில்லியன் சதுர மைல்கள் நிலப்பரப்பு கொண்ட சீனாவில் 130 கோடி மக்கள் குடியிருந்து வருகின்றனர். உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் நகரங்களில் வாழும் பெரும்பாலான மக்கள் நெரிசல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

1970களில் தொடங்கி இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை சீனா அரசாங்கம் கடைபிடித்து வந்த ஒற்றை குழந்தை கொள்கையை திரும்ப பெற்றுக்கொண்டதை அடுத்து இனி வரும் காலங்களில் ஜனத்தொகை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அலுவலகம் செல்லும் காலை நேரங்கள், வீடு திரும்பும் மாலை நேரங்கள் மட்டுமின்றி சாதாரண வார இறுதி நாட்களில் கூட சாலைகள் நிரம்பி வழிவதையே பரவலாக காண முடிகிறது.

வார இறுதி நாட்களில் கடற்கரையில் குவியும் மக்களால் ஒரு நெல்மணி அளவுக்கு மணலை கண்ணால் காண முடியாத அளவுக்கு கூட்டம் அலை மோதுகிறது. இதே நிலைதான் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசு நிறுவியுள்ள நீச்சல் குளங்களிலும்.

பாடசாலை தேர்வுகள் அனைத்தும் நாடு முழுவதும் ஒரே காலத்தில் நடைபெறுவதால் பெரும் அறைகளில் இதற்கான ஏற்பாடுகளை ஆண்டு தோறும் செய்து வருகின்றனர்.

மட்டுமின்றி பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் அந்தி உறங்க போதுமான அறைகள் இல்லாததால் சமயங்களில் விளையாட்டு அரங்கங்களில் அவர்களை தங்க வைக்கின்றனர்.

கடந்த 1970-ல் இருந்து பின்பற்றப்பட்ட ஒற்றை குழந்தை திட்டத்தால் சினா ஒட்டு மொத்தமாக 400 மில்லியன் குழந்தை பிறப்பினை தடுத்துள்ளதாக குறிப்பிடுகிறது. ஆனால் அரசுக்கு தெரியப்படுத்தாமல் கிராமப்பகுதிகளில் இரண்டு குழந்தைகளுக்கும் அதிகமாக பெற்றுக்கொண்டவர்களும் உள்ளதாக சில கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து சீனர்கள் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அர்சு அறிவித்துள்ள நிலையில் எதிர்காலத்தில் ஜன நெரிசல் மிகவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

-http://news.lankasri.com