அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பில் மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும்,
அதில் கலந்து கொள்வதிலிருந்து முன்னாள் போராளிகள் விலகியிருப்பதாக வடக்கு மாகாண சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதேச சுகாதார வைத்திய அலுவலகத்தின் ஊடாக மருத்துவப் பரிசோதனைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் முதற்கட்டமாக முன்னாள் போராளிகளின் கடந்த கால மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆயினும், அந்த மருத்துவ அறிக்கைகளை வழங்க முன்னாள் போராளிகள் பலர் மறுப்புத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
சில முன்னாள் போராளிகள் தமது மருத்துவ அறிக்கையை வழங்கியுள்ள போதும், அவர்கள் மேலதிக மருத்துவப் பரிசோதனைக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் வடக்கு மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, இது தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவிருந்து மருத்துவப் பரிசோதனை நடவடிக்கையினை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-http://www.puthinamnews.com