காணாமல் போனோர் தொடர்பில் பல்வேறுபட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபையிடம் கொடுத்திருந்தது.
ஆனாலும் தற்போது வரை அவை நிறைவேற்றப்படாமல் காணப்பட்டு வருவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைச்சபையில் 33வது கூட்டத்தொடரில், இலங்கையினை மையப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒருங்கு செய்யப்பட்டிருந்த உப நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், லங்காசிறி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கையினுடைய தற்போதைய தன்மை காணாமல்போனோர் விவகாரங்கள், முன்னாள் போராளிகளுடைய மருத்துவ பரிசோதனைகள் பற்றிய விபரங்கள்.
தற்போது சர்வதேசம் இலங்கை மீதான பார்வை போன்றன தொடர்பிலும் விரிவான விளக்கத்தினை அனந்தி சசிதரன் லங்காசிறியுடன் பகிர்ந்து கொண்டார்.
-http://www.tamilwin.com
ஆனந்தி அவர்களே, விடாமல் துரத்துங்கள் …. உண்மை உங்கள் பக்கமே உள்ளது …. அது கடவுளுக்கு நிகரானது …..