தமிழீழம் இது வெறும் வார்த்தையல்ல. தமிழீழம் என்பது ஒரு இனத்தின் வரலாறு, ஒரு மொழியின் வரலாறு, தமிழ் இன கலாச்சாரத்தின் மொத்த உருவம், வீரத்தின் அடையாளம், வெற்றியின் குறியீடு என்று சொன்னாலும் அது மிகையாகாது.
ஏனெனில் மேற்கூறிய அனைத்துக்குமான ஒரு உருவமாக தமிழீழம் காணப்பட்டது. நீண்டகால வரலாற்றை கொண்ட தமிழீழத்தில் இனவிடுதலையை வலியுறுத்தி கடந்த 30 ஆண்டுகளாக ஆயுத போராட்டம் இடம்பெற்றது.
அது வெறும் ஆயுதப் போராட்டமல்ல. புதையுண்டு போன தமிழினத்தின் வாழ்க்கையை, நிலத்தை, உரிமையை, மீட்பதற்கான போராட்டம்.
இந்த கொடிய ஆயுத போராட்டத்தில் ஏற்பட்ட அத்தனை இழப்புகளுக்கு மத்தியிலும் தமிழர்கள் சிறந்த ஒரு வாழ்க்கை கட்டமைப்புடனேயே வாழ்ந்தார்கள். 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்துடன் அந்த வாழ்க்கை கட்டமைப்பு முறை முற்றிலும் மாறிபோனது.
இதன் காரணமாக உலகத்திற்கும், உலக மக்களுக்கு எடுத்துக்காட்டாக காணப்பட்ட தமழீழத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என ஈனத்தனமான செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கின்றது.
இந்த செயற்பாடுகள் அனைத்தையும் நாம் ஒரு சம்பவமாக பார்க்ககூடாது. மாறாக இதனை ஒரு இன அழிப்பு நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும். இவ்வாறு திட்டமிட்ட வகையில் வடக்கை அழிக்கும் சக்திகள் யார்..? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் …?
-http://www.tamilwin.com
https://youtu.be/WxIlmFhO3QE?list=PLXDiYKtPlR7Ow_NfLBTrXj5Q8mmoaomSD