ஆண்டுக்கு 60 லட்சம் பேர் உயிரிழப்பு: அதிர்ச்சி அளிக்கும் காரணம்

air pollutionஉலகளவில் 10ல் 9 பேர் மோசமான காற்றை சுவாசித்து வருவதாகவும், இதனால் ஆண்டுதோறும், 60 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இது தொடர்பாக ஜெனீவாவில் அந்த அமைப்பின் மூத்த அதிகாரி கூறுகையில், இந்த அறிக்கை மூலம் உடனடியாக அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

இந்த சூழ்நிலையை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மோசமான காற்று பிரச்னை நகரங்களில் அதிகமாக உள்ளது. கிராமங்களில் இதை விட மோசமாக உள்ளது.

வளர்ந்த நாடுகளை விட ஏழை நாடுகள் இதனால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் சுற்றுச்சூழல் அனைத்து நாடுகளையும், அனைத்து தரப்பினரையும் பாதிக்கிறது.

இது பொதுமக்களின் உடல்நலத்தை உடனடியாக பாதிக்கும். இதனை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், அனைத்து அரசுகளும், சாலைகளில் வாகன போக்குவரத்தை குறைக்கவும், குப்பை மேலாண்மையை வலுப்படுத்துவதுடன் சுற்றுபுற மாசுபாட்டை ஏற்படுத்தும் சமையல் முறையை மாற்ற வேண்டும் எனக்கூறினார்.

இது தொடர்பான ஆய்வு உலகில் உள்ள 3000 நகரங்களில் நடத்தப்பட்டது. அதில் 92 சதவீத மக்கள், மோசமான சுற்றுப்புற நிலையில் வாழ்கின்றனர்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்கள் கொண்ட நாடுகளில் மோசமான காற்று காரணமாக அதிகளவில் பலியாகின்றனர். சீனா, வியாட்நாம், மலேஷியா நாடுகளில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

-http://news.lankasri.com