இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவிவரும் கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்ள வேண்டும் என ஐ.நா சபை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து ஐ.நா சபையின் பொதுச் செயலர் பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறுகையில், இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை கவனித்துக் கொண்டிருக்கிறோம்.
ஐ.நா இராணுவ கண்காணிப்புக் குழு, போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
தற்போதைய சூழலில் இருநாடுகளில் நிதானமாக செயல்படுவதுடன் தங்களுக்கு இடையே நிலவிவரும் கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-http://news.lankasri.com