பெர்சேயில் ஐஎஸ் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாகக் கூறும் சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் முகம்மட் யூனுசுக்கு அந்த இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புண்டா என்பதை போலீசார் ஆராய வேண்டும் என்று மசீச மகளிர் பகுதி கேட்டுக்கொண்டிருக்கிறது.
அதன் தலைவர் ஹெங் சியாய் கை, ஐஎஸ் ஊடுருவல் பற்றி செஞ்சட்டை கும்பல் தலைவருக்குத் தெரிய வந்துள்ளது என்றால் அது ஆராயவதற்குரியது என்றார்.
“புக்கிட் அமான் பயங்கரவாத- எதிர்ப்புப் பிரிவினரையும் அனைத்துலக உளவுத்துறை நிறுவனங்களையும் தவிர்த்து ஐஎஸ் நடவடிக்கைகள் குறித்து அறிந்த ‘நம்பத்தக்க வட்டாரங்கள்’ என்றால் அவர்கள் ஐஎஸ் தொடர்பாளர்களாகத்தான் இருக்க வேண்டும்”, என ஹெங் கூறினார்.
தமக்கு பெர்சேயைப் பிடிக்காது என்றாலும் அதிகாரிகள் “செஞ்சட்டை தலைவருக்கு இத்தகவல் எப்படி கிடைத்தது என்பதை உடனடியாக விசாரித்து அவர் கூறியிருப்பதில் உண்மை உண்டா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்”, என்றவர் வலியுறுத்தினார்.
தொடர்பு இல்லாவிடிலும் பெரும்பாலான முஸ்லிம்கள் ISIS ன் அனுதாபிகள்.