சந்துபோங் மலை ஏறிவிட்டு இறங்கிக் கொண்டிருந்தபோது வழியில் சிக்கிக்கொண்ட 12மலையேறிகளைத் தீயணைப்புப் படையினர் பத்திரமாக மலையடிவாரத்துக்கு அழைத்து வந்தனர்.
மாலை மணி 5.30 அளவில் அவசர அழைப்பு வந்தது என்றும் உடனடியாக எண்மர் அடங்கிய மீட்புக்குழு சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு அனுப்பப்பட்டனர் என்றும் தீயணைப்பு, மீட்புத் துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
“இரவு 7.26க்கு அங்கு சென்றடைந்த மீட்புக்குழு 10 ஆடவரும் இரு பெண்களும் மலையில் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பதைக் கண்டது”.
10.23க்கு அனைவரும் மலையடிவாரத்துக்குப் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.