மூட்டை முடிச்சுகளுடன் ஈழத்தை விட்டுப் போக வேண்டியவர்கள் யார்?

eezhamஈழத்தை விட்டு மூட்டை முடிச்சுகளுடன் போகவேண்டியது யார் என பொதுபலசேனாவின் கருத்தை கண்டித்துள்ளார் சர்வதேச ஹிந்து மக்கள் சபா தலைவர் ஜெ.மயூரசர்மா.

இது தொடர்பில் அவ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மஹாவம்ச வரலாற்றின் படி இன்றைய பீகாரில் இருந்து விஜயன் என்பவனினதும் அவனுடைய நண்பர்களினதும் அட்டூழியங்களைத் தாங்க முடியாது அவனை நாடு கடத்த எண்ணிய அவனது தந்தை அவனையும் அவனது தோழர்களையும் தோணி ஏற்றி நாட்டை விட்டுக் கலைத்து விடுகிறார்.

இவ்வாறு நாட்டை விட்டுக் கலைக்கப்பட்ட இந்தக் கூட்டத்தினர் போக இடம் தெரியாமல் தோணி போன போக்கில் சென்றனர். ஆனால் அது கரைதட்டி நின்ற இடமே ஈழம் ஆகும்.

Sambuddha Jayanthi Stampஅவன் இங்கே வருகின்ற போது ஈழத்தில் திராவிட வர்க்கம் இருந்தது. அவர்கள் இயக்கர், நாகர் என்கின்ற இருவரும். தாய்மொழியைத் தமிழாகக் கொண்டவர்கள்.

இயக்கர் குலப் பெண்ணான குவேனி என்பவள் நீர்த்தாகத்தினால் அலைந்த விஜயனையும் அவன் கூட்டத்தையும் வலை கொண்டு சிறைப்பிடிக்கிறாள். இதன் பின்னர் அவர்களை விட்டு விடுகிறாள்.

இவ்வாறு பிழைத்துக் கொண்ட கூட்டத்தினர் சில குழுக்களாகப் பிரிந்து தமது இருப்பிடங்களை அமைத்துக் கொள்கின்றனர். இது நடந்தது கிமு.5ம் நூற்றாண்டில் என்று மஹாவம்சம் கூறுகிறது.

அப்போது அவர்கள் பாளி மொழியினையே பேசினர்.கலிங்கப் போரில் வெற்றி பெற்ற அசோகன் தனது வெற்றியால் அழிக்கப்பட்ட உயிர்கள் உடமைகளை நேரில் பார்த்தவன் மனமுடைந்து போய் விடுகிறான்.

இதற்கு தக்க உபாயம் எது எனத் தேடும் போது அவன் சித்தார்த்தர் அதாவது கௌதம புத்தரின் அகிம்ஷா கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு அவரது வழியை தான் பின்பற்றியதோடு மட்டுமல்லாமல் மக்களையும் அவ்வழியினை தொடரச் சொல்கின்றான்.

இவ்வளவு காலமும் இந்துக்களாக இருந்த மக்கள் மன்னன் கூற்றிற்கு இணங்கி புத்தரின் அகிம்சை வழியே சென்றனர். ஆனால் அசோகனால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் சொன்னதைக் கடைப்பிடக்கவும் இல்லை.

அதனால் அசோகன் புத்தரின் கொள்கைகளை உலகு எங்கும் பரப்ப எண்ணினான். இதனால் தனது மகனான மகிந்தனையும் மகளான சங்கமித்தையினையும் ஈழத்திற்கு அனுப்பி புத்தரின் கொள்கைகளை பரப்ப சொன்னான். அவ்வாறு அவர்கள் வந்திறங்கிய இடமே மாதகல்.

அதனால் மாதகல், கந்தரோடை போன்ற இடங்களில் வாழ்ந்த ஈழத்தவர்கள் அந்தக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு பௌத்தத்தை தழுவினர்.இது நடந்தது கி.மு 3 ம் நூற்றாண்டு என மஹாவம்சம் கூறுகிறது.

ஆக விஜயன் வந்து 200 வருடங்களின் பின்னர். அப்போது ஈழத்தை ஆண்டவன் தேவநம்பியதீசன். இவன் ஒரு இந்துமன்னன். மகிந்தன் சங்கமித்தையின் போதனையால் தேவநம்பியதீசனும் பௌத்தத்தை சாருகிறான்.

ஆக விஜயன் வந்து 200 வருடத்தின் பின்பே பௌத்தமதம் இலங்கைக்கு வருகிறது. இதில் இருந்து ஒன்று தெளிவாகிறது விஜயனில் இருந்தே சிங்கள இனத்தின் தோற்றம் இலங்கையில் ஆரம்பிக்கிறது என்று கூறும் சிங்கள பௌத்த வாதிகள் ஒன்றை விளங்க வேண்டும்.

தேவநம்பியதீசன் காலத்தில்தான் சமஸ்கிருதம், பாளி மொழிகள் செல்வாக்குப் பெறுகிறது. பாளி, சமஸ்கிருதம், தமிழ் இவை மூன்றினதும் கலந்த மொழி அமைப்பே சிங்களம். ஆக சிங்களம் என்று உருவாகியது தேவநம்பியதீசன் காலத்திலே ஆகும்.

அப்போ கிமு 3ம் நூற்றாண்டின் பின் வந்ததே சிங்களம் என்ற மொழி அமைப்பு. அதுவரைக்கும் தமிழ் இந்துக்களும் தமிழ் பௌத்தர்களுமே ஈழத்தில் வாழ்ந்தனர்.

சிங்கள மொழி ஒருதாய் மொழி அல்ல. அது ஒரு கிளை மொழி ஆகும். அத்தோடு பௌத்தம் உருவாகிய இந்தியாவில் அது வழக்கிழந்தே போய் விட்டது.

சிங்களம் என்ற ஒரு இனம் ஈழத்தைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை. சிலோன் அல்லது சிறிலங்கா என்ற பெயர் ஆங்கிலேயர் காலத்தே ஏற்பட்டதாகும்.

அது வரைக்கும் ஈழம் என்ற பெயரிலே முழுத்தீவும் அழைக்கப்பட்டது.

இப்போது சொல்லுங்கள் மூட்டை முடிச்சுடன் ஈழத்தைவிட்டுப் போக வேண்டியவர்கள் யார்………?????

-http://www.tamilwin.com

TAGS: