பேரணியில் கலந்துகொள்வதில்லை என்ற பாஸின் முடிவை பெர்சே மதிக்கிறது

mariaதூய்மையான   நியாயமான    தேர்தலுக்காக   போராடும்   பெர்சே,  நவம்பர்  19-இல்   நடத்தத்    திட்டமிடப்பட்டுள்ள   ஐந்தாவது      பேரணியில்    கலந்துகொள்வதில்லை  என்ற   பாஸ்  கட்சியின்   முடிவை    மதிக்கிறது.

“அவர்களின்  முடிவை   மதிக்கிறோம். (மனமாறி)   திரும்பி  வந்தால்   அதையும்  வரவேற்போம்”,  என   பெர்சே   தலைவர்  மரியா    சின்   அப்துல்லா   மலேசியாகினியிடம்    தெரிவித்தார்.

“பேரணி    குறித்து   அறிவிப்பதற்கு  முன்பே   பாஸ்   அதன்   முடிவைத்   தெரிவித்திருந்தது”,   என்றாரவர்.

பெர்சே   கடந்த     சனிக்கிழமை    தொடங்கி     பேரணி   பற்றிய  விழிப்புணர்வை    ஏற்படுத்துவதற்காக       வாகனத்   தொகுதிகளை   நாடு  முழுக்க   அனுப்பி  வருகிறது.   நவம்பர்    19வரை   மொத்தம்   ஏழு   வார  இறுதிகளில்    ஏழு  வாகனத்  தொகுதிகள்  அனுப்பப்படும்.