இராணுவக் கட்டமைப்பில் மாற்றம் இல்லை!! முல்லைத்தீவில் சம்பந்தன் காட்டம்

sambanthanஇலங்கையில் ஆட்சி மாறியிருந்தாலும், இராணுவக் கட்டமைப்பில் இன்னமும் மாற்றம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், அதனாலேயே தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண உறுப்பினர் மரியாம்பிள்ளை அன்ரனி ஜெகநாதனுக்கு இன்று தனது இறுதி அஞசலியை செலுத்திய சம்பந்தனிடம், முல்லைத்தீவு உட்பட வன்னி மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதில்லை என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கேட்ட போதே அவர் இந்தத் தகவல்களை முன்வைத்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில், கடந்த சனிக்கிழமை உயிரிழந்த வட மாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதனின் பூதவுடல் பொது மக்களின் அஞசலிக்காக முல்லைத்தீவு நகரிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஏராளமான பொது மக்களும், அரசியல் வாதிகளும் இறுதி அஞசலியை செலுத்திவரும் நிலையில், முல்லைத்தீவுக்கு இன்று சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும் இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்த அரசியல்வாதிகளில் முக்கியமானவரான வடமாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன்,

இவை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அக்கறை செலுத்துவதில்லை என பகிரங்கமாக குற்றஞ்சாட்டியதுடன், எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனுடன் நேரடியாகவும் வாக்குவாதங்களில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் அவரது கோரிக்கைகள் தொடர்பில் இனியாவது கவனம் செலுத்தப்படுமா என இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட இரா. சம்பந்தனிடம் கேட்கப்பட்டது.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவப்பிரகாசம் சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறீஸ்கந்தராஜா மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைரட்ணம் உள்ளிட்ட பல பிரதிநிதிகள், அன்ரனி ஜெகநாதனின் பூதவுடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தினர்.

-http://www.tamilwin.com

https://youtu.be/8qdYDKOSB9U

TAGS: