மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் விக்கிலீக்ஸ்: என்ன ஆவணங்கள் வெளியிடுகிறது தெரியுமா?

wikileaks and julian assangeஅமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முக்கிய ஆவணங்களை வெளியிட உள்ளதாக விக்கிலீக்ஸ் அதிரடியாக அறிவித்துள்ளது.

விக்கிலீக்ஸ்(WikiLeaks) என்ற இணையத்தளம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவாக உள்ளதை தொடர்ந்து இது தொடர்பாக நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஜேர்மனியில் உள்ள பெர்லின் நகரில் இருந்து காணொளி காட்சி வழியாக அசாஞ்சே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முக்கிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை வெளியிட முடிவு செய்துள்ளோம்.

மேலும், இந்த தகவல்கள் வாக்களிக்கும் நாளான நவம்பர் 8-ம் திகதிக்கு முன்னதாகவே வெளியிடப்படும்’ என அசாஞ்சே தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சி.ஐ.ஏ பற்றிய ரகசிய தகவல்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அசாஞ்சே தற்போது அமெரிக்க தேர்தல் தொடர்பான தகவல்களை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

-http://news.lankasri.com