1எம்டிபியுடன் தொடர்புள்ளதாகக் கூறப்படுவதை ஆஸ்திரேலிய வங்கி மறுத்தது

anzஆஸ்திரேலிய   வங்கி   ANZ-க்கு     1எம்டிபி  விவகாரத்தில்   தொடர்பில்லை.  இதை   அவ்வங்கியின்   தலைமை   செயல்  அதிகாரி   ஷேன்  எலியட்    ஆஸ்திரேலிய   நாடாளுமன்றத்தின்   பொருளாதாரக்  குழுவிடம்    தெரிவித்தார்.

எலியட்   வங்கியின்   செயல்பாடு   குறித்து    நாடாளுமன்றக்   குழுவிடம்  விளக்கமளித்தார்.

“1எம்டிபியுடனோ   அங்கு   நடந்துள்ளதாகக்  கூறப்படுவதுடனோ   வங்கிக்கு    எந்தத்  தொடர்புமில்லை”,  என்றாரவர்.

மலேசிய  வங்கியான   அம்பேங்கில்    ANZ-க்கு  25 விழுக்காடு  பங்குரிமை  உள்ளது.  1எம்டிபி  பணம்    அம்ப்பேங்க்  வழியாகத்தான்   கையாடப்பட்டிருப்பதாக   அமெரிக்க   விசாரணையாளர்கள்   கூறியுள்ளனர்.