மலேசிய குற்றச்செயல் கண்காணிப்புப் பணிப்படை (மைவாட்ச்) தலைவர் ஆர்.ஸ்ரீசஞ்சீவனைக் குற்றச்செயல் தடுப்புச் சட்ட(பொகா)த்தின்கீழ் தடுத்து வைப்பதற்காக கூட்டரசு நீதிமன்றத்தில் செய்திருந்த மேல்முறையீட்டை போலீஸ் இன்று மீட்டுக்கொண்டது.
வழக்கைத் தொடரும் எண்ணமில்லை என்று அரசுத்தரப்பு வழக்குரைஞர் முகம்மட் சிந்தி நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து ஐவரடங்கிய நீதிபதிகள் குழுவுக்குத் தலைமைதாங்கிய தலைமை நீதிபதி அரிபின் ஜக்கரியா மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தார்.
மைவாட்ச் தலைவர் இந்த ஒரு வழக்கிலிருந்து தப்பினார். ஆனால் கோலாலும்பூர், சிரம்பான், தெமர்லோவில் மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற குற்றத்துக்காக அவர்மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.