அரசு அதிகாரிகள் எளிதாக தப்பித்துக் கொள்கிறார்கள்: இஏஐசி வருத்தம்

eaicஅமலாக்க   அதிகாரிகளின்    ஒழுங்கீனங்களை     விசாரிக்கும்      அமலாக்க நிறுவன நேர்மை ஆணையம்(இஏஐசி)   தன்னுடைய   பரிந்துரைகள்   பெரும்பாலும்  மதிக்கப்படுவதில்லை    என   வருத்தப்படுகிறது.

ஒழுங்கு   நடவடிக்கை    எடுக்க   வேண்டியவர்கள்    எளிய    தண்டனைகளை   விதிப்பதால்    தவறு    செய்தவர்கள்  தப்பித்துக்  கொள்கிறார்கள்    என  இஏஐசி   தலைவர்   யாக்கூப்    முகம்மட்   சேம்    கூறினார்.

வழக்கமாக,  ஆணையம்   விசாரணை   செய்ததும்     அதன்   முடிவுகளையும்  பரிந்துரைகளையும்    என்ன    தண்டனை    கொடுக்கலாம்    என்பதையும்   சம்பந்தப்பட்ட   நிறுவனத்தின்   ஒழுங்கு  நடவடிக்கை  பிரிவுக்கு    அனுப்பி   வைக்கும்.

“ஒருவேளை   அதிகாரிகளின்   முறையீட்டைக்   கேட்டு    அவர்கள்   தண்டனையைக்   குறைத்து    விடலாம்.

“ஆனால்,  பரிந்துரைக்கப்பட்ட     தண்டனைக்கும்    உண்மையில்   கொடுக்கப்படும்    தண்டனைக்குமிடையில்     மிகப்   பெரிய   வேறுபாடு   இருந்தால்    அது   ஏன்   என்று    எங்களுக்குத்    தெரிந்தாக    வேண்டும்”,  என  யாக்கூப்   தெரிவித்ததாக    த   ஸ்டார்   ஆன்லைன்   கூறிற்று.

எடுத்துக்காட்டாக  ஒன்றையும்   அவர்   குறிப்பிட்டார்.  ஆணையம்  ஆறு  மாதச்    சம்பளத்தை    நிறுத்துமாறு    பரிந்துரைக்கும்.  ஆனால்,  அதிகாரிக்கு    ஒரு   எச்சரிக்கை    மட்டுமே   விடுக்கப்பட்டு   விவகாரம்  முடிவுக்கு   வரும்.

“இது   மிக   எளிய   தண்டனை.  இதனால்  எந்தத்   தாக்கமும்    ஏற்படாது.  அது   மற்ற   அதிகாரிகளுக்கு     ஓரு    சரியான   செய்தியை   உணர்த்துவதாகவும்   இருக்காது”,  என்றாரவர்.