பக்கத்தான் ஹராபனும் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து)வும் எதிரணியை வலுப்படுத்துவதற்காக பாஸ் கட்சியுடன் பேச்சு நடத்தும் என எதிரணி முன்னாள் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.
இன்று காலை கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் தாமும் பெர்சத்து இடைக்காலத் தலைவர் முகைதின் யாசினும் சந்தித்தபோது மற்றவற்றோடு இது குறித்தும் விவாதித்ததாக அவர் தெரிவித்தார்.
“பாஸுடன் பேச்சு நடத்த ஒப்புக்கொண்டோம்”, என்றாரவர்.
அப்படியானால் புதிய எதிரணிக் கூட்டணியில் பாஸும் இடம்பெறுமா என்று வினவியதற்கு, “முதலில் பேசுவோம். அதன்பின் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்”, என அன்வார் கூறினார்
நல்ல யோசனை! நாட்டிலுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டாலொழிய, அல்தான்துயா நஜிப்பின் அரசை வீழ்த்துவது கடினமே.
pas சை குப்பையில் போடு வதே நலம். இவன்களை நம்பவே முடியாது.