பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது சரி தான்: இந்தியாவுக்கு ஜேர்மனி ஆதரவு

gerசர்வதேச தீவிரவாதத்திற்கு எதிராக போரிட்டு வரும் இந்தியாவிற்கு முழு ஆதரவு அளிப்பதாக ஜேர்மனி அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கான ஜேர்மன் தூதரான Martin Ney நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘எல்லை தாண்டி தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு சர்வதேச சட்டங்களில் இரண்டு விதிமுறைகள் உள்ளன.

முதலாவதாக, ஒவ்வொரு நாடும் தனது அண்டை நாடுகளிலிருந்து தீவிரவாதிகள் நுழைகிறார்களா? என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, ஒவ்வொரு நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பொருட்டு சர்வதேச தீவிரவாதம் தனது நாட்டிற்குள் நுழைவதை தடுக்க ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை உள்ளது.

எனவே, தீவிரவாதத்தை தடுக்க போரிடும் தனது தோழமை நாடான இந்தியாவிற்கு ஜேர்மனி ஆதரவாக இருக்கும். இது வெறும் வார்த்தைகள் மட்டும் அல்ல.

இந்திய பிரதமரான மோடி மற்றும் ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலும் இதையே முன்மொழிந்து கையெழுத்திட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய பாராளுமன்ற துணை தலைவரான Ryszard Czarnecki என்பவரும் இந்தியாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், பாகிஸ்தான் நாட்டில் இருந்து வெளியாகும் தீவிரவாதிகளை ஒடுக்க இந்தியாவிற்கு உலக நாடுகளின் ஆதரவு நிச்சயம் தேவை.

இந்த தீவிரவாதிகளை ஆரம்பத்திலேயே ஒடுக்காவிட்டால், இவர்கள் பின்னர் ஐரோப்பிய நாடுகளையும் தாக்க முயற்சி செய்வார்கள் என Ryszard Czarnecki தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com