அகதிகள் முகாமில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 20 பேர் பலி

refugeesசிரியாவில் உள்ள அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு சிரியாவில் உள்ள Idlib மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள Atma அகதிகள் முகாமில் தான் இந்த கொடூர தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

துருக்கி எல்லைக்கு அருகில் உள்ள இந்த அகதிகள் முகாமில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் நுழைந்துள்ளார்.

நுழைவு பாதை ஒன்றில் காவலர்கள் இல்லாத பகுதியை நன்கு அறிந்து அந்த மர்ம நபர் நுழைந்துள்ளார்.

முகாமிற்குள் சென்றதும் தன்னுடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான். இச்சம்பவத்தில் 20 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், படுகாயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

முகாமில் சிரியா ராணுவ பயிற்சி பெற்று வரும் நிலையில் வீரர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சிரியாவில் நிகழ்ந்து வரும் உள்நாட்டு போரின் விளைவாக அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

இந்த உள்நாட்டு யுத்தத்தில் 2011ம் ஆண்டு முதல் சுமார் 2,50,000 பேர் பலியாகியுள்ளதாகவும், 12 மில்லியன் பேர் இடம்பாறியுள்ளதாகவும் ஐ.நா சபை புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 -http://news.lankasri.com