ஜோராக் சட்டமன்ற உறுப்பினர் ஷாருடின் சாலே அம்னோவிலிருந்து வெளியேறியதால் மாநிலச் சட்டமன்றத்தில் பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்திருக்கிறது.
ஜோகூரில் அம்னோ மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழப்பது இதுவே முதல்முறை என அமனா அவைத் தலைவர் அமினோல்ஹுடா ஹசான் கூறினார்.
ஷாருடின் பெர்சத்து கட்சியில் சேர்ந்திருப்பதாக அவர் சொன்னார்.
இதன்வழி ஜோகூர் சட்டமன்றத்தில் பிஎன் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 38-இலிருந்து 37 ஆகக் குறைந்து எதிரணி உறுப்பினர் எண்ணிக்கை 18-இலிருந்து 19ஆக உயர்ந்துள்ளது.