அட்லாண்டிக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள மேத்யூ புயல் தாக்கியதில் ஹைதியில் மட்டுமே ஒரு நகரம் அழிந்துபோனது. மேலும், பலி எண்ணிக்கை 842 ஆக உயர்ந்துள்ளது.
புயல் காரணமாக அமெரிக்காவின் புளோரிடா, ஜார்ஜியா, சவுத் கரோலினா ஆகிய மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கரீபியன் மற்றும் அட்லாண்டிக் கடல் பகுதியில் மையம் கொண்ட மேத்யூ புயல் கடந்த 3 நாட்களில் ஹைதி, ஜமைக்கா, கியூபா, பகாமா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஹைதி நாட்டை ‘மேத்யூ’ புயல் சின்னாபின்னமாக்கியுள்ளது. பல நகரங்கள் உருக்குலைந்து போய் விட்டன. பல்லாயிரக்கணக்கான வீடுகள் தரை மட்டமாகி விட்டன.
மேத்யூ சூறாவளி ஹைதி நாட்டின் தென்மேற்கு பகுதியை கடுமையாகத் தாக்கியது. இதில் அந்த பகுதியிலுள்ள முக்கிய நகரான ஜெரேமே முற்றாக அழிந்துபோனது.
இன்றைய நிலவரப்படி ஹைதியில் மட்டுமே பலி எண்ணிக்கை 842 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மேத்யூ புயல் அமெரிக்க கடலோர பகுதியை தாக்கத் தொடங்கியுள்ளது.
-http://news.lankasri.com