இவர்கள் யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது!

isissஈராக்கில் படு ரகசியமான இடம் ஒன்றில் வைத்து அதி முக்கியமான ஐ.எஸ் தலைவர்கள் கூடி , சந்திப்பொன்றை நடத்த திட்டம் தீட்டியுள்ளார்கள். அதற்கு அமைவாக அவர்கள் அந்த இடத்தில் கூடி, முதலில் அல்லாவை பிரார்த்தித்துவிட்டு பேச ஆரம்பித்தவேளை. யாரும் சற்றும் எதிபாராத வகையில் அங்கே திடீரென வந்த முகமூடி அணிந்த குழு ஒன்று அவர்கள் மீது சைலன்ஸர் பூட்டிய துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என அறியப்படுகிறது. குறித்த ஐ.எஸ் தலைவர்கள் அந்த இடத்தில் ஒன்று கூட முன்னர், தமது மெய்பாதுகாப்பாளர்களை வெளியே நிறுத்தி வைத்திருந்துள்ளார்கள். ஆனால் அவர்கள் அனைவரையும் ஓசை படாமல் கொன்றுவிட்டு, குறித்த முகமூடி அணிந்த குழு ஒன்று உள்ளே நுளைந்து எந்த சத்தமோ இல்லை ஆரவாரமோ இன்றி இவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

பலரது நெற்றியை பார்த்து சுட்டு, அனைத்து முக்கிய தலைவர்களையும் அவர்கள் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்கள் என்று ஈராக்கில் இருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. இவர்கள் ஈராக் ராணுவத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையி. அமெரிக்காவின் என்.எஸ்.ஏ உளவு நிறுவனம் மற்றும் சி.ஐ.ஏ போன்ற நிறுவனங்கள் கூட இவர்கள் தமது ஆட்கள் இல்லை என்று தெரிவித்துள்ளது. இதுபோக பின் லேடனை போட்டு தள்ளிய அமெரிக்க “சீல்” படைகளே இதனைச் செய்திருப்பார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில். அமெரிக்க கடல் படையினரும் இச்சம்பவத்தை மறுத்துள்ளார்கள்.

இன் நிலையில் , இவர்கள் யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கொரில்லா தாக்குதல் நடத்தி பலரை அதிர்ச்சியில் உறையவைத்த, இவர்களுக்கே கொரில்லா தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் … இது தான் இப்போதைய லேட்டஸ் நியூஸ் மற்றும் பரபரப்பு தகவல் …

-http://www.athirvu.com

isis-attack

TAGS: