பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடர்டியின் நூறு நாள் ஆட்சியில் இதுவரை போதை மருந்து கடத்தல்காரர்கள், குற்றம்புரிவோர் என 3700 பேர் அதிரடியாக கொல்லப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் போதை மருந்தின் ஆதிக்கமும், அந்த பழக்கத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. methamphetamine என்னும் போதை வஸ்துவுக்கு அந்நாட்டில் 3.7 மில்லியன் மக்கள் அடிமையாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அறிக்கை கூறுகிறது.
இந்நிலையில் அந்நாட்டின் புதிய அதிபராக ரோட்ரிகோ டுடர்டி கடந்த மே மாதம் பதவியேற்றார். தேர்தல் பிரச்சாரத்தின் போதே நாட்டில் குற்றங்களை குறைப்பேன், போதை மருந்து கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்திருந்தார்.
அதன் படி பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக அவர் பதவி ஏற்றதிலிருந்தே போதை மருந்துகள் கடத்தும் ஆசாமிகளுக்கு மரண தண்டனையை அதிரடியாக வழங்கி வருகிறார்.
என்கவுண்டர் துப்பாக்கி சுடுதல் மூலம் ஒரு நாளைக்கு நாற்பது பேர் என தனது நூறு நாள் ஆட்சிக்குள் 3700 பேரை அந்நாட்டு பொலிசார் கொன்று குவித்துள்ளனர். மேலும் இது சம்மந்தமாக 26000 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையில் இது மனித உரிமை மீறல் என அமெரிக்க அதிபர் ஒபாமா பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ரோட்ரிகோ டுடர்டி எங்கள் நாட்டை அமெரிக்க துட்சமாக மதிக்கிறது. அமெரிக்கா – பிலிப்பைன்ஸ் இடையில் உள்ள உறவை வெட்டி கொள்ள கூட நாங்கள் தயங்கமாட்டோம் என அவர் அதிரடியாக கூறியுள்ளார்.
-http://news.lankasri.com
அடங்காதவர்களை அடக்க அடக்குமுறை அவசியமாகிறது !
மற்ற நாடுகள் வேறு வழிகளை தேடும்போது இவர் மட்டும் போதை மருந்து குற்றங்களில் ஈடுபடுவோரை கொலை செய்யும் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. இவர் ஒரு திமிர் பிடிதா தலைவர் போல் உள்ளது. அடுக்கு முறை தேவைதான் அதை தோற்று வித்த தலைவரை தேடி பிடிது அழிக்க வேண்டும் மே ஒழிய. அடிமையான அப்பவி போதை பித்தர்களை மரணம் கொடுபது வெட்க கேடனது. இப்படி பார்த்தல் நம் நாட்டிலும் அதிகமனோர் இறந்து இருப்பார்கள்.