ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளா? அவர்கள் யார்? ஆச்சரியப்பட வைத்த மக்கள்

afஆப்கானிஸ்தானில் மையம் கொண்டுள்ள ஆப்கான் தீவிரவாதிகளை பற்றி உலக மக்களே அறிந்துவைத்திருக்கிறபோது, அங்கு Wakhan என்ற மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு ஆப்கான் தீவிரவாதிகள் பற்றியும், நாட்டில் நடக்கும் போர் பற்றியும் எதுவும் தெரியாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டஜிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் Wakhan அமைந்துள்ளது.

மிகவும் பின்தங்கிய இந்த கிராமப்பகுதியில் சுமார் 12,000 பேர் வசிக்கின்றனர். பராம்பரியமிக்க சிறிய வீடுகளை அமைத்து அதில் வாழ்ந்து வருகின்றனர். அதிக வீடுகள் மரத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆடு மாடுகளை மேய்ப்பதை தொழிலாக செய்து வரும் இப்பகுதி மக்களுக்கு, ஆப்கான் தீவிரவாதிகள் மற்றும் அமெரிக்க இராணுவத்தினரை பற்றி தெரியவில்லை.

நவீன வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தால், வீட்டில் கருங்கற்களை வைத்து அதில் தீமூட்டி சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். மிகவும் குளிர்ப்பிரதேசம் என்பதால் இப்பகுதி மக்கள் அதிகமாக சூப் வைத்து குடிக்கின்றனர்.

af1இப்பகுதி மக்களின் வாழ்க்கை நிலை பற்றி பிரெடஞ்சு புகைப்படக்காரர் Eric Lafforgue என்பவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, இப்பகுதி மக்கள் முற்றிலுமாக உலக மக்களிடம் இருந்து வேறுபட்டு காணப்படுகின்றனர்.

ஆப்கான் நாட்டில் வசிக்கும் இப்பகுதி மக்களுக்கு ஆப்கான் தீவிரவாதிகள் பற்றியும், அவர்கள் நடத்தும் போர் பற்றியும் எதுவும் தெரியவில்லை. போரா? அப்படியென்றால் என்ன என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

மேலும், சிறுவர்களுக்கும் உலக புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர்களான மெஸ்ஸி, ரொனால்டோ பற்றியும் தெரியவில்லை. ஆப்கானிஸ்தான் அரசாங்கம் இப்பகுதியைப் பார்வையிட adventue தேடும் சுற்றுலா பயணிகள் ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது.

-http://news.lankasri.com