மருத்துவர் உதவியுடன் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

suicideசுவிட்சர்லாந்து நாட்டில் குணப்படுத்த முடியாத நோயின் காரணமாக மருத்துவர்களின் உதவியுடன் தற்கொலை செய்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸின் மத்திய புள்ளியியல் துறை நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் மருத்துவர்களின் உதவியுடன் 742 பேர் தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது அதற்கு முன்னர் 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது, சுவிஸில் நிகழ்ந்த ஒட்டுமொத்த மரணங்களில் இது 1.2 சதவிகிதம் ஆகும்.

இதேபோல், மருத்துவர் உதவியுடன் ஆண் மற்றும் பெண் நோயாளிகள் சராசரி விகிதத்திலேயே உள்ளனர். ஒரு லட்சத்தில் 10 ஆண்களும், 9 பெண்களும் மருத்துவர் உதவியுடன் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

இவர்களில் குணப்படுத்த முடியாத புற்றுநோய் காரணமாக 42 சதவிகித நோயாளிகளும், நரம்பு சிதைவு காரணமாக 14 சதவிகித நோயாளிகளும், இதய கோளாறு காரணமாக 11 சதவிகித நோயாளிகளும் மற்றும் தசை எலும்பு பாதிப்பு காரணமாக 10 சதவிகித நோயாளிகளும் தற்கொலை செய்துள்ளனர்.

இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டவர்களில் அதிகமானவர்கள் சூரிச் மாகாணத்தை சேர்ந்தவர்கள். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் Geneva, Neuchatel, Vaud, Appenzell Outer Rhodes மற்றும் Zug ஆகிய மாகாணங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com