சமரசங்களும் சமாதானங்களும் போதும் !
அதி விளக்கம் சொல்லிவிட்டு, பிறகு வைத்தியம் பார்க்கும் பழைய மருத்துவரை போல அல்லாமல். நவீன வித்வானாக நேராக அறுவை சிகிச்சைக்கு வருகிறேன் .
14 பொதுத்தேர்தல் வரப்போகிறது. இந்த 2017 பட்ஜெட் மலேசிய தமிழனுக்கு முக்கிய விளைச்சலை தந்தால் அரசியலில் இலக்கில் இருக்கும் தமிழர்களின் திசை காக்க கரைத் தேடி போவதுபோல, ஆளும் கட்சி மேம்பட்டு மீண்டும் கொடிநடும். இல்லாவிட்டால் இறுதியும் இழப்பும் இன்றியமையா தடுப்பாகும் என்று அஞ்சுகிறேன் ! !
காக்கா என்றதும் காக்கா பிடிக்க அல்ல. எங்கள் தமிழன் வரலாற்று உண்மையில் காக்கா வந்தால் அதிஷ்டாம் என்பார்கள். காரணம் திசை கருவி இலா காலத்தில் எங்கள் கப்பலோட்டிய தமிழன் காக்காக்களை கப்பலில் ஏற்றி ஒன்றொண்டாக விட்டுத்தான் கரை கட்டினான், காக்கா போலா மற்ற பறவை இனத்துக்கு மட்டும்தான் பச்சை நிற கரை தெரியும் என்பது உலகம் முழுதும் சுற்றிய தமிழன் கண்ட ஆய்வு.
ஆனால் தமிழன் என்றால் உலகம் வெறுக்குது. இங்கு மலேசியத்தமிழன் மட்டும் உலகம் விரும்பும் தமிழனாக உள்ளோம்.என்றாலும் நாங்கள் பெருமைப்பட ஒன்றுமில்லை.
இலக்கியமும் இதிகாசமும் பேசி சுதந்தர சூட்டை புகழ்ச்சிக்கு போர்த்திக்கொண்டு காய்ச்சலில் “பெனடால்” விழுங்குகிறோம்.நிற்க வீக்கம் புரையோடி பொங்குகிறது என்பதுதான் குருதியின் சிகப்பு உண்மைகள். கவனிக்க ஆளில்லை,
அன்புள்ள பிரதமர் அவர்களே !
மலேசியத்தமிழர்கள் பொருளாதாரத்தில் வீழ்ந்துள்ளோம் ! ஆனந்தாவும், ஏ கே வும், பெனசாவும் தமிழனுக்கு உதவவில்லை என்பதுதான் உண்மை ! இன்னும் பல இந்தியனை காட்டி ஊதாப்பப்பூ போல காயாவைப்பது அறியாமையாகும்.
இன்னும் மூன்று ஆண்டுகளில் 2020 வாக்கில் பொருளாதாரத்தில் மட்டும் ( மற்றது தெரியாது) வளர்ச்சி அடையப்போகும் நாடாக மலேசியா உருவாக்கம் பெறும் என்று நம்புகிறோம். இதில் என் கணக்குப்படி சுமார் 30லச்சம் தமிழனுக்கும் 5 லச்சம் இந்தியனுக்கும் பொருளாதார தகுதியில் என்ன வித்தியாசங்கள் ?
விவாசான் “வா- வா” என்ற பொது 2020 இது கடந்த முப்பது ஆண்டுகள் திட்டமாகும். இதற்கு முன் 5 ஆண்டுகள் புதிய பொருளாதார கொள்கை என்று 55 ஆண்டுகளை முடித்து விட்டோம். அதற்கு முன் பச்சை புத்தககம் என்றானது.
வெறும் அரசியல் ஆசையின் பாதையில் நாடோடு பயணம் செய்துவிட்டோம், புதிய பொருளாதார கொள்கை இன்னும் யாரு யாருக்கோ தொடரலாம் . 100 ஆண்டுகள் ஆகட்டும். இன்னும் 30 ஆண்டுகள் வாவாசன் 2050 வரை புதுப்பிக்கப்படலாம். அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வானம் வந்து வீழ்த்தாலும் அச்சமில்லை. ஆனால் நமக்குத்தான் மிச்சம் தெரியவில்லை. அந்த அளவுக்கு நிபுணத்துவ அறிவாளிகள் இருந்தும் அக்கம் பக்கமெல்லாம் அச்சம் அரசும் சிரிக்கிறது ! நமது இந்தியன், சீனன் மலைக்கார அரசியலும் அவமானாம்படுகிறது.
அவ்வையின் நிலா பாட்டும் காக்க நரியும் வடையும் நினைவுக்கு வந்து வந்து போகிறது. வடையை கடைசிவரை அவ்வை பாட்டி விற்றதாக தெரியவில்லை ( இது பொருள் ஆதாரப் படையல் ).
2020 ஆண்டின் பெருமைமிகு சவால் சத்தியம் என்னவென்றால் நாட்டின் எந்த இனமும் பின் தங்கி விடக்கூடாது என்பதாகும். ஒரு ஏழையும் பிச்சைப்பாத்திரம் ஏந்தக்கூடாது என்பதாகும் “என்று நினைக்கிறேன்.” இதுதான் 2020 நாட்டின் வளர்ச்சியின் நிசப்த்தமாக இருக்க வேண்டும்.
நான் ஒரு பிரதமராக இருந்தால் இதுதான் இலக்கு என்று என் முயற்சி மூளையை வல்லரசு நோக்கி முடக்கி விட்டுருப்பேன்.
இதில் எந்த இனமும் விடுபடாமல் இன பொருளாதார சமசீர் வளர்ச்சியை கணக்கில் மையமிட்டுருக்கும். சீடிக் , சீட் வழி உங்கள் முயற்சிகள் இருந்தன.
இதுவரை 1 பில்லியன் முதலீடாக பல மூட்டைகளில் இந்தியன் இனம் குளிர்காய்ந்து இருக்கும். ஆனால் நாட்டின் சொத்துரிமையை தடவி பார்த்தால் மீண்டும் கீழ் நோக்கிய சரிவு இடர்தான் கலரா காட்சியிடுகிறது !
இந்தியர்களில் 89 % சகிதம் தமிழர்கள் (இருக்கலாம் )மலேசியத்தமிழர்களின் வாழ்வாதார வளப்பத்திற்கு சீடிக் ,,சீட் ..2020… அல்லது 55 ஆண்டுகால புதிய பொருளாதார புதுப்பித்தல்களில் எந்த அளவுக்கு தமிழர்கள் இல்லாத வசதியான இந்தியர்கள் அபகரித்தார்கள் என்ற கணக்கியல் உண்மை ஆய்வை கண்டீர்களா பிரதமர் அவர்களே ! அரசியலில் தமிழர்கள்தான் உங்களுக்கு அதிகம் வாக்குகளை தரவல்லவர்கள். 11 % இந்தியனின் 2% சகிதம் கூட வாக்குச்சவாடிக்கு வருவதில்லை. அவ்வளவு வசதி இண்டியன் இளையோர்கள் 90 % நாட்டில் இல்லை. சொகுசா வெளிநாட்டிலும் நமக்கு ஓட்டு இல்லை.
தாங்கள் பிரித்து வைத்த மலேசிய தென்னகத் தமிழர்களுக்கு பொருளியல் பட்டுவாடா ” கொடுத்ததில்” எத்தனை அசல் மலேசியத் தமிழர்கள் பயன் அடைந்தார்கள் !
வாகன கடனுக்கும் ,வாங்கி CREDIT CARD கடன் பட்டுவாடா, மைக்கா மந்திரத்துக்கு, ஏழ்மை, வறுமையின் காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பே “கடன் கருப்பு பாட்டியல்” தமிழர்களின் பொருளாதார சூசமத்துக்கு காரணமானது.
பிறகு தோட்டங்கள் ஒரு பெரிய நிறுவனத்துக்கு அஸ்தமமாகி குறைந்த வெளிநாட்டவர் சம்பள வேட்டையில் தமிழர்களின் தோட்ட குடும்பங்கள் வெளியேறிய காட்சிகள் பல…. பட்டணங்களில் பரிதேசிகளா ஜாகா பார்க்க மட்டும் தகுதியானார்கள், கல்வி வசதி இல்லா குறைந்த கல்வி. அரை குறை SRP , SPM இவைகள்யாவும் இன்று பேடிகள் சாம்பவனாக பி40 என்று ஆங்கிலத்தி சொல்லப்படும் 40 வயதுக்கு கீழ் மலேசியத்தமிழர்களின் மனித வளம், மனித வெட்டு வேற்று முதலீடுகள் கால்வாய் நீராக நிராகரிக்கப்பட்டு பட்டுப்போனதுதான் மிச்சம்.
மலேசியத் தமிழர்களின் 95 % விழுக்காடு ஏழைகளை வைத்துக்கொண்டு இந்த நாடு எப்படி 2020 குள் வளர்ச்சியடைத்துவிடும் என்ற கணிப்பு எங்களுக்கு சத்தியமா சாத்தியமா தெரியவில்லை.
மலேசியாய்த்தமிழனுக்கு குறைத்தது 5% சொத்துரிமைக்கு 15 பில்லியன் தேவைப்படுகிறது. இது தொழில் திறன் கல்வி வழியாகதத்தான் நிலைத்து நிற்க வாய்ப்புண்டு. மனித வளம் என்பது நிலையற்ற வணிக கடன் என்பதில் இல்லை அல்லது வணிக நிதி உதவி என்பதில் இல்லை …மாறாக “மாராவை” போன்ற நீண்டா தூர கல்வி மனித வள முதலீட்டில்தான் என்பதை நீங்கள் ஏன் ஏற்க மறந்தீர்கள் ?
‘கோடி கோடியாய் கொடுத்து விட்டேன்’ என்பதும் திறன் கல்வியே இல்லாமல் “ஆ லோங்” போல இந்த சமுதாயத்தை கடனாளியாக அடித்து அமுக்குவதும் மேம்பாடு அல்ல ! இது இந்த தமிழர்களையும் நாட்டின் ஒரு தேசிய இனத்தயும் அடிமையாக்க வைத்த பின்னடைவு பாவமென கருதுகிறேன்.
தோட்ட உழைப்பில் ஆப்பு என்ற நிலைக்குப்பின் நாட்டில் தோட்டத்துறை தவிர்த்து 30 க்கு மேற்பட்ட முக்கிய தொழில் திறன் துறைகள் உண்டு, பேசும் மொழியை வைத்து UNSKILL அல்லது ஸ்கில் நிபுணத்துவ அல்லாத தொழில்துறைகள் உண்டு என்பதை சீட் சீடிக் ஏன் அடையாளப்படுத்தி தொழில் துறை நிபுணத்துவ மேம்பாட்டை வளர்க்கவில்லை.
சீடிக், ஸீட் DOCTORATE நிபுணத்துவர்களை வைத்துக்கொண்டது கொடுத்த பணத்தை நடப்பு நோயாளிகளுக்கு வைத்தியம செய்து முடித்துவிட்டால் வளரும் நோயை யார் கவனிப்பது. இன்று சீட்டும் சீடிக்கும் வழங்கி யுள்ள நிதிகள் 50 மேற்பட்ட ஆசையால் ஆசாமிகளுக்கு என்பது எங்கள் கணிப்பு ? ஆளும் கட்சி காரனுக்கும் பண வசதிக்கு எதிர்க்கட்சி இந்தியனுக்கும் கொடுத்த பணங்கள் இன்னும் இந்த மலேசியத் தமிழர் இனத்தை தூக்கி நிறுத்தவில்லை.
தமிழ் பேசுபவர் எல்லாம் தமிழர் இல்லை தமிழர்களைப்போல இந்தியன் தமிழன் பங்கை பறித்த பரிதவிப்பை நீங்கள் தெரிய வேண்டும். இது இன வெறி அல்ல. தமிழர் இனம் ஏமாந்த விதியும் சதியும் நிறைந்த மதிநுட்ப வேட்டைத்தனம்.
தமிழரல்லாத இந்தியன் தலைமைத்துவம்.தமிழனாக இருந்தும் இந்தியன் இனத்துக்கு சோடைப்போன சாமி போன்ற தமிழன்.
மொத்தமாகவே வெறும் 11 % சதவீதம் வடுகன், பிராமணன் ,தெலுங்கன், உணர்வற்ற இலங்கை ஜபானா தமிழன், சிங்கள , சிண்டி, இந்தியன் பட்டியலில் சேராத புஞ்சாபிபைகள் ,சிங் ,மராட்டி இவர்கள் எல்லாம் மலேசிய இந்தியர்கள் பட்டியலில் தமிழர்களின் பொருளாதார கோட்டாவை வாயில் போட்டு கொட்டாவி விட்டு தமிழன் உருப்பட மாட்டான் என்றால் யாருக்கு எந்த நிரம்பியல் கோளாறு என்று யோசியங்கள்.
மலேசியாவில் சீனர் மலைக்காரர் இனங்களை காட்டிலும் இந்தியன் என்ற தமிழனல்லா கலப்பனுக்கு தமிழன் மீது ஏறி மேய்க்க கடந்த 100 ஆண்டுகளாகவே மேம்பம்.
மீண்டும் அழுத்த்மாக அறிவிக்கிறோம் இன எதிர்மறை குற்றமல்ல. விரிவாக்க உண்மை விளங்க வேண்டும் என்ற விமர்சனம். இந்தியனும் நாங்கள் தமிழன் வளர்த்த தத்துப்பிள்ளைதான் அது தனியா சிறப்பதில் எங்களுக்கு பொறாமை இல்லை ஆனால் ஆளும் வளரனும் அறிவும் வளரனும் என்பதில் எங்கள் வள்ளுவன் சொன்ன அது ஏன் உனக்கு இல்லாமல் போனது என்பதில் எங்களுக்கு ஏம்மாற்றம்.
இது பிரதான தலைமைத்துவ தப்பா? பிரதமருக்கு தெரியாத அல்லது திட்டமிட்ட மறைமுக நிபுணத்துவ வேட்டையா ? தமிழர்கள் என்றும் தீவிர வாதிகள் அல்ல எங்கள் இதிகாசங்கள் ஒரு வேளை அப்படி இலக்கியம் சொல்லி இருக்கும் . கபாலியின் தப்பான கபளீகரம் போல நாங்கள் தூண்டப்பட்ட, துண்டாடல் துண்டுகள்.
ஒரு மலேசியத்தமிழனாக உங்கள் வயதை ஒத்தவன்தான் எழுதுகிறேன். நான் உங்களுக்காக மாற்றி யோசிக்கிறேன். பேமடம், ,EPU , JPM இந்தியன் பகுதிகள் எல்லாம் “தமிழினின்” பொருளாதார சோகம் தெரியாமல் அரசியல் ஓட்டு வங்கி யாகம் புரியாமல் ஆளும்கட்சியில் புதிய அடையாளங்கள் தேடுவதை வியப்புடன் வியாபிக்கிறேன். அரசு கொடுப்பது வேறு. அரசியல் வாதிகளாக கொடுப்பது வேறு என்ற தாரக மந்திரம் விளங்க வேண்டும். இந்த இனம் அரசை நம்புகிறது அதன் பிரதமரை நம்புகிறது !
கடுமையாக அல்ல முடிவாக , PRU 14 சவாலை வென்று வர தமிழர்களின் B40 என்பதை B50 யாக மாற்றி மூத்த தமிழினத்துக்கு தொழில் திறன் கல்விக்கு மனித வள மேம்பாட்டுக்கு 90 கோடியை 2017 பட்ஜெட்டில் தந்து இன்னொரு 10 கோடியை தமிழர்களின் தொழில் திறன் பிரச்சரத்துக்கு வழங்கி 2017 -2019 வரை மூன்றாண்டு திட்டவரைவை கொடுத்து புதிய தமிழர்களின் தொழில் திறன் NDUKSI KEMAHIRAN BANGSA TAMILAR MALAYSIA என்ற அடையாளத்தில் அரசு அரசியல் அடையாளத்தை நிமிர்த்துங்கள். பிரதமரின் தலைமைத்துவ மாண்புகள் வெல்லட்டும்.
வாழ்க மலேசியா 2020
பொன் ரங்கன்
தமிழர் தேசியம் மலேசியா
அன்புள்ள பிரதமரா? எப்போதிலிருந்து? ஊழல்வாதிக்கு அன்புள்ள பட்டம். என்ன தான் தூக்கினாலும் ஒன்றும் நடக்காது–நம்பிக்கை நாயகனுக்கு நேரத்திற்கு நேரம் பேசுவது புதிது அல்ல.
மக்கள் சக்தி தனேந்திரன் மாதிரி பொன் ரங்கனும் பொழைக்க தெரிந்த பிள்ளை..
மக்கள் சக்தி தனேந்திரன் மாதிரி பொன் ரங்கனும் பொழைக்க தெரிந்த பிள்ளை..
இந்த வழ வழா கொழ கொழா எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது நம்மபிக்கை நாயகரே..
வரும் பொதுத் தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்தினாலே போதும்..கதை கந்தலாகி விடும்
அறுக்க மாட்டான் இடுப்புல அறுபத்து எட்டு அறுவா என்பார்கள் . அறிவால் எழுதுங்கள் என்றால் இந்த உலக மய காலத்திலும் சிரங்கு சொறி எண்ணங்களால் மூளையை நிதானப்படுத்தி என்ன எழுதப்பட்டு உள்ளது என்றும் தெரியாமல் பிதற்றும் ஓரிரு வரி எடுத்தலான்கள் எழுதாமலிருப்பது நன்று.தயவு செய்து ஆய்வாளர்களை கிண்டல் செய்ய வேண்டாம் . இனத்தை வாழவிடுங்கள், நன்றி தமிழா !
ஐயா PON ரங்கன் அவர்களே , இன்றைய அவசர கால சூழ்நிலையில் வாழும் மலேசியர்களுக்கு உங்களின் எழுத்தும் ,சிந்தனையும் புரியாது !
பாட்டி வடை சுட்டது ! வள்ளுவன் தத்துவம் சொன்னது ! எல்லாம் தமிழனுக்கே புரியாது !! ” IF YOU CANT SEE THE SOLUTION , IT ‘S BECAUSE YOU CANT SEE THE PROBLEM ” நமது பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியவில்லை என்றால் , நமது பிரச்சனைகள் என்ன வென்று ஆராயவும் இல்லை ! பிரச்சனைகளை பட்றி கவலை கொள்வதும் இல்லை ! பூக்களுக்கு தண்ணிர் விடுவதற்கு பதிலாக ! வேருக்கு நீர் பாய்ச்ச வேண்டும் ! நாடு சுதந்திரம் அடைந்தது முதல் அரசியில் இந்நாட்டில் இன அடிப்படையில் தான் இயங்கி கொண்டிருக்கிறது ! எந்த பிரதமரும் எந்த இனத்திற்கும் நேரடியாக எதையும் செய்ய வில்லை ! மலாய் காரர்களுக்கு ! umno ! சீனருக்கு , MCA ! இந்தியர்களுக்கு ! MIC ! அரசியல் ரீதியாக நமது உரிமைகள் பெற பட வில்லை ! இரு தலைவர்கள் எதோ அவர்கள் பதவி வகித்த காலத்தில் தங்களால் முடிந்ததை இந்த சமுதாயத்திற்கு செய்து சென்றனர் ! வெள்ளையனையும் நாம் குறை சொல்ல முடியாது ! அவன் வளமுடன் வாழ நமது உடல் உழைப்பை பயன் படுத்தி கொண்டான் ! அவனுக்கு ஒரு வகையில் நாம் நன்றி கடன் பட்டவர்கள் ! இந்த வளம் மிக்க நாட்டில் வாழ்வதற்கும் ,நமது மொழி ! நமது மதம் இந் நாட்டில் வேர் ஊன்றுவதற்கு துணை நின்றவன் ! 80 பதுகளில் நாடு 2020 என்ற கோட் பாட்டில் துரித வளர்ச்சி கண்ட போது நம்மால் நாம் சுரண்ட பட்டொம் !! இன துரோகம் நமது இனத்தை படு குழியில் தள்ளியது ! அந்த தாக்கத்திலிருந்து நம்மால் இன்னும் மீள முடியவில்லை ! அரசியல் ரீதியாக தானை தலைவர்களை யும் புரட்சி தலைவர்களையும் ! மக்கள் தலைவர்களையும் நம்பி ! மற்றவர்கள் நடந்து கொண்டும் ! ஓடி கொண்டும் இருந்த போது ! நாம் உறங்கி கொண்டும் ! செய்வதறியாது விழி பிதிங்கியும் இருந்தோம் ! தவறான வர்களின் தலைமைத்துவம் ! சுயநல வாதிகளின் பதவி வெறி பண வெறியாலும் பாதிக்க பட்டொம் ! இன்றும் பாதிக்க
பட்டுக்கொண்டிருக்கிறோம் ! இதற்கு தீர்வு என்ன ! இது நமது இன பிரச்னை இல்லை ! உலகளாவிய பிரச்னை ! பதவிக்கு வருபவன் மக்களை சுரண்டுவதும் ! பதவியை பயன் படுத்தி கொள்ளை யடிப்பதும் ! சாதாரண செயல் பாடுகள் ஆகி விட்டன ! போர்க்களத்தில் எதையா ஒப்பாரி ! அவனவன் அவன் பையை நிரப்பி கொண்டிருக்கையில் மற்றவனை பட்ட்றி எதையா அக்கறை ! அண்ணண் தம்பி களுக்குள் ஒற்றுமை இல்லை இதில் ! சமுதாயம் !!! தன் கையே தனக்கு உதவி ! தனி மனித வளர்ச்சியை தவிர நாம் சமுதாயமாக இணைந்து எதையும் செய்ய முடியாத கால சூழ்நிலையில் இருக்கிறோம் !!
பொன் ரங்கன் கடந்த காலங்களில் இப்படி ஆய்வு என்ற பெயரில் பலரை அனுபவத்தின் பேரில் பார்த்ததின் பலன்தான் இன்று ஒரு வரி எழுத்தாளர்கள் உருவாகி இருக்கிறார்கள் என்பதை இன்னும் நீங்கள் புரிந்து கொள்ள வில்லை. இனம் வாழ்கிறதோ இல்லையோ பலர் இனத்தை வைத்து பொழைப்பு நடுத்துகிறார்கள் என்பதனையும் மறுக்க முடியாது. இறுதியாக இந்த பட்டியலில் உங்கள் பெயரும் இடம் பெறும்.என்பதில் சந்தேகம் இல்லை.
முதலில் தலைப்பே சரி இல்லை. அதென்ன “மலேசியத்தமிழரகளுக்கு” என்று ஒரு பிரிவினரை மட்டும் குறிப்பிடுவது? அப்படி என்றால் மலேசியசிங்குகளுக்கு ஒன்றும் தேவை இல்லையா ? மலேசியசிறும்பான்மையினருக்கு என்று குறிப்பிட்டிருந்தால் அதில் ஒரு நீதி இருக்கிறது, போன் ரங்கன் அவர்களே ! ஆனால் உங்களை போன்று காழ்புணர்ச்சிகளை மட்டும் கொண்டவர்கள் மூன்றாவது சிறும்பான்மை இனத்தவர்களுக்கு மட்டும் எல்லாம் நடக்க வேண்டும் என்பது, விளம்பரம் தேடுவது. இது ஆராய்ச்சி அல்ல மாறாக வெறுப்பை தூண்டும் செயல் ….. சீனாவில் ஒரு பழமொழி உள்ளது. ஒருவனுக்கு மீன் பிடிக்க தூண்டில் தரலாம் ஆனால் மாறாக மீன் பிடித்து தாரா கூடாது என்று. அப்படி தான் எல்லா நாடுகளிலும் அரசாங்கம் செய்கிறது. ஒரு காலத்தில் இந்தியர்கள் இந்த நாட்டை வளப்படுத்தினோம் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக இதுவரை 200 ஆண்டு காலம், தமிழ் கல்வியை அரசாங்கம் இலவசமாக தந்துள்ளது இந்த நாட்டில். குடி உரிமை முதல் , மட்ட்ற எல்லா சலுகைகலையையும் தந்துள்ளது. ஆனால் இன்று இந்திய குடிமக்களால் எவ்வளவு லாபம் பெறுகிறது இந்த அரசாங்கம் என்று கேள்வி எழுந்தாள், என்ன பாதி வைத்துள்ளோம் நாம் ? இன்று செம்பனை விற்பனையில் 70 பில்லியன் வருமானம் உள்ளது மலேசியாயாவிற்கு, அந்நிய குடிமக்களால் மலேசியாயாவிற்கு கிடைக்கிறது. அவர்களின் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க அரசாங்கம் பள்ளிக்கூடம் தர வேண்டும் என்பது மனிதாபிமானம். அப்படி பார்த்தல், 30 லட்சம் இருக்கும் இந்தியர்கள் மத்தியில் 45 லட்சமாக இருக்கும் அந்நிய தொழிலாளர்களுக்கு, இந்த பட்ஜெட்டில் இலவச பள்ளிகள் தாரா பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தால் நீங்கள் ஒரு மகா ஆத்ம என்பேன். ஆனால் நீங்களோ தமிழர்களுக்கு மட்டும் கிடைத்தால் போதும் என்பது விளம்பரம் தேடுவது….. எங்கே மலேசிய தமிழர்களால் அரசாங்கத்திற்கு எவ்வளவு லாபம் என்று ஒரு ஆராய்ச்சி செய்யுங்கள் பொன் ரங்கன் அவர்களே ?
Dhilip நீங்கள் நிச்சயம் முனைவர் பட்டத்துக்குத் தகுதியானவர். யாரும் நினைத்துப் பார்க்காததை நீங்கள் நினைத்துப் பார்க்கிறீர்கள். வாழ்த்துகள்!
நான் உண்மையை சொல்கிறேன், எனவே எதிர்ப்புக்கள் பலமாகத்தான் இருக்கும்; காரணம் மனிதர்கள் சந்தர்ப்பவாதிகளாக மாட்ட்றபட்டு வெகு காலம் ஆகுகிறது. எல்லோருக்கும் அவர்கள் பிரச்சனையை மட்டும் தான் பெரிதாக்க தெரிகிறது. ஆனால் அரசனுக்கும், அரசியலுக்கும் அப்படியல்ல. கார்ல் மாஸ் கொண்டு வந்தது தான் 5 தொழிலாளர்-மனித உரிமை திட்டம். அதில் தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி, வயதான காலத்தில் ஓய்வூதியம், வாழும் காலத்தில் இருக்க இருப்பிடம், குறைந்த விலை பொருட்கள், சுதந்திரமான சிந்தனை வேண்டும் என்றார். அவர் ஒரு தமிழர் இல்லை ஆனால் முன்மொழிந்தவைகள் நம் முன்னோர்களுக்கு மிகவும் அவசியமானது, மனிதன் மனிதனாக வாழ …..எனவே நாம் உண்மையாக இருந்தால் மட்டுமே உண்மையை மற்றவர்களிடம் எதிர்பார்க்க முடியும் ….
இன்றல்ல..நேற்றல்ல, பல ஆண்டுகளாக தமிழர் ” திருக்குறள்” ரஷ்யா,ஐரோப்பா,சீனா,ஜப்பான் போன்ற நாடுகளில் வலம் வருவதை நீர் அறியாதது எங்கள் தப்பா?
பொன் ரங்கன் அவர்களே, மீண்டும் மீண்டும் உங்கள் வாதங்களை படித்து பார்க்கிறேன், ஆனால் அதில் ஒரு உன்னதம் தெரியவில்லை மாறாக ‘விளங்காதனம்தான்’ தெரிகிறது . முதலில் ஒரு நாட்டிற்கு பொருளாதாரம் என்பது எப்படி கிடைக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். மலேசியாவில் பெட்ரோலியம் மட்டும்: 80 முதல் 120 பில்லியன் வரை வருடத்திற்கு கிடைக்கிறது. அப்படியே செம்பனை 70 முதல் 80 பில்லியன் வரை கிடைக்கிறது. ரப்பர் 40 முதல் 60 பில்லியன் வரை கிடைக்கிறது. இவைகள் மிக பெரிய மூலதனம். இதில் நீங்கள் கூறும் தனிதமிழனின் பங்கு எங்கே இருக்கிறது ? காரணம் அந்நிய தொழிலாளர்கள் 96 % செம்பனை மற்றும் ரப்பர் உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். பெட்ரோலியம் 96% மலாய்க்காரர்கள் மாநிலமான கெளந்தான் வசம் உள்ளது. KLSE 810 நிறுவனங்களில் பத்துக்கும் குறைவாகத்தான் இந்தியர்களிடம் இருக்கிறது. காரணம் அவர்கள் மட்டும்தான் பொருளாதார சிந்தனைகளை முன் வைத்து காயை நகர்த்தினார்கள்; முன்னேறினார்கள் . தமிழர்களின் உரிமையையும் பொருளாதாரத்தையும் காப்பாத்துறேன் பேர்விழி என்று ஒருத்தர் வந்தார்: தானை தலைவர் சாமி வேலு. மகாதீர் தந்த TV3 , SIME DERBY , TELECOM , TNB , MRCB பங்குகளை (150 மில்லியன்) விற்று ம இ கா வில் போட்டு கொண்டார் சாமி வேலு என்ற ஒரு தமிழன். இதில் தெலுங்கனை, மலையாளியை, சிங்கலிஸ், தெரிந்தவன் தெரியாதவனை எப்படி குறை சொல்ல முடியும் நீங்கள் பொன் ரங்கன் அவர்களே ? மா இ கா வின் பொருளாதார பிரிவான மைக்கா ஹோல்ட்டிங் 49 பிரிவுகளில் வர்த்தகம் செய்தார்கள். 20 ஆண்டுகளில், லாப ஈவு கூட குடுக்க முடியாமல் 66,000 தமிழ் சந்தாதாரர்களை ஏமாற்றியது மா இ கா ! முதலீடு 80 கோடியை தாண்டும். ஒன்றுமே செய்யாமல் அந்த பணத்தை வைத்திருந்தால் 20 ஆண்டுகளில் 400 கோடியை நெருங்கும். அப்பொழுது எங்கே போனீர்கள் பொன் ரங்கன் அவர்களே ? அப்பொழுதெல்லாம் வாயில் குச்சி மிட்டாய் சப்பி கொண்டு இருந்து விட்டு, இப்பொழுது மற்ற இந்திய பிரிவினர்கள் மீது பழி போடுகிறீர்களே , உங்களுக்கு மன சாட்சி இல்லையா ? இல்லை மக்கள் சக்தி தனேந்திரனிடம் பயிற்சி எடுக்கிறீர்களா ?