அவுஸ்திரேலியாவின் தேசிய கல்வித் திட்டத்தில் தமிழ் மொழியை ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள வேண்டும் என Prospect தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹூ மெக்டெர்மாட் (Hugh Mcdermott) கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான பிரேரணையை நியூ சவுத் வெல்ஸ் பாராளுமன்றத்தில் நாளைய தினம் தாக்கல் செய்யவுள்ளார்.
தமிழ் கல்வியும், கலாசாரமும் இந்தியா மற்றும் அவுஸ்திரேயாவுக்கு மட்டுமன்றி தெற்காசிய நாடுகளுக்கு மிகவும் முக்கியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகம் முழுவதும் 70 மில்லியன் மக்கள் தமிழ் மொழி பேசுகின்றனர். இதனை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மொழியை பாடப்புத்தகத்தில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அவுஸ்திரேலிய மாணவர்களும் பயன்பெற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இவ்வாறான நடவடிக்கை சமகால மாணவர்களுக்கு மட்டுமன்றி எதிர்கால சந்ததிக்கும் பயனுள்ளதாக அமையும் என ஹூ மெக்டெர்மாட் குறிப்பிட்டார்.
தமிழ் மொழியை தேசிய பாடமாக அங்கீகரிக்குமாறு நாளைய தினம் பாராளுமன்றத்தில் வைத்து கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்மூலம் அவுஸ்திரேலிய மாணவர்கள் தமிழ் மொழியை ஒரு பாடமாக கற்க முடியும். தமிழை கற்றுக்கொடுக்கும் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
தமிழ் மொழியை பரப்பும் கலாசார நிறுவனங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர் பாராளுமன்ற கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயங்களை ஹூ மெக்டெர்மாட் குறிப்பிட்டார்.
-http://www.tamilwin.com
தமிழ் மொழி கற்க ஆண்டவன் அனுக்கிரகம் வேணும்….அது அந்த மண்ணிலே நிறைய இருக்குமோ?
சொந்த மண்ணில் தொலைந்து போகின்ற மொழி,அடுத்த மண்ணில் உயிர் பெற துடிக்கிறது.
மிகவும் பாராட்டக்கூடிய செயல். நன்றி.
செம்மொழியான தமிழ்மொழியின் அருமை உணர்ந்தவர்கள், அற்புதமான தமிழ்மொழியின் கருவூலங்கள் அவ்ர்களுக்கு முழுப் பயனை நிச்சயம் நல்கிடும், பெருமகிழ்வும் பேருவகையும் அடைகிறோம், நல்வாழ்த்துக்கள். 🙂