ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து ஈராக்கின் முக்கிய நகரான Mosul-ஐ நிச்சயம் கைப்பற்றுவோம் எனவும் அதற்கான ராணுவ பணிகள் தொடங்கி விட்டதாகவும் ஈராக் பிரதமர் Haider -al- Abadi நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈராக் நாட்டில் உள்ள பெருநகரமான Mosulலில் தற்போது ஒரு மில்லியனுக்கும் மேலான மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த நகரை கைப்பற்றிய ஐ.எஸ் தீவிரவாதிகள், அப்பகுதி முழுவதையும் இஸ்லாமிய இடமாக மாற்ற போவதாக அறிவித்தனர்.
இரண்டு வருடங்களாக தங்கள் நகரை மீட்க ஈராக் ராணுவம் போராடி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து பாதுகாப்பு கருதி வெளியேறுகின்றனர். இனி பொறுக்க முடியாது என ஐ.எஸ் தீவிரவாதிகள் பிடியில் இருந்து Mosul நகரை மீட்க முழு வீச்சில் தாக்குதல் நடத்தப்போவதாக ஈராக் பிரதமர் கூறியுள்ளார்,
இது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் ஆலோசனை செய்யும் விடயம் இன்று நடைப்பெற்றது. ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பின் கடைசி வலுவிடமாக Mosul விளங்குகிறது. ஈராக்குக்கு அமெரிக்க உதவி செய்வதாக உறுதியளித்ததை அடுத்து அந்த நகரை சுற்றி 3 லட்சம் ராணுவ படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அங்கு வாழும் மக்கள் பத்திரமாக வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் வெற்றி நமதே எனவும் பிரதமர் Haider -al- Abadi கூறியுள்ளார்.
இதனிடையில் அங்கு பத்தாயிரம் ஐ.எஸ் தீவிராவாதிகள் பதுங்கியிருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-http://news.lankasri.com