விலங்குகள் ஓட்டப்பந்தயத்திற்கு பெருகும் எதிர்ப்புகள்: சுவிஸில் தடை வருமா?

pig raceசுவிஸில் தினமும் நடைபெற்று வரும் பன்றி ஓட்டப்பந்தயத்தை ஒழிக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Nancy Holten என்ற விலங்குகள் நல ஆர்வலரே குறித்த பந்தயத்தை ஒழிக்க வேண்டும் என போராடி வருகிறார்.

Nancy Holten கூறியதாவது, st.Gallen மாகாணத்தில் olma விவசாய கண்காட்சி என்ற போர்வையில் தினமும் நடைபெற்று வரும் பன்றி பந்தய நிகழ்ச்சியை ஒழிக்க வேண்டும்.

விலங்குகளை கண்ணியத்தோடு நாம் நடத்த வேண்டும். அதற்காக இந்த பந்தயங்களை அகற்ற வேண்டும். விலங்குகளை மதிக்க வேண்டியது அவசியமாகும். அவற்றை ஓடுவதை பார்க்க மக்கள் வருகிறார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள குறித்த பந்தயத்தின் மேலாளர் Christian Manser கூறியதாவது, olma பார்வையாளர்கள் முட்டாள்கள் இல்லை. இந்த பந்தயத்திற்கான அர்த்தத்தை அவர்கள் நன்று அறிந்தவர்கள் என கூறியுள்ளார்.

-http://news.lankasri.com