சிவப்புச் சட்டை இயக்கத் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ், கைது செய்யப்பட்டு நான்கு நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை அவரின் செயலாளர் டூரானி இஸாம் உறுதிப்படுத்தினார்.
வெளிநாடு சென்றிருந்த ஜமால் நாடு திரும்பிய உடனேயே விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
போலீசார், இரண்டு வாரங்களுக்குமுன் சாபாக் பெர்னாமில் சிவப்புச் சட்டைக்காரர்களுக்கும் பெர்சே 5 வாகன அணி பங்கேற்பாளர்களுக்குமிடையில் நிகழ்ந்த மோதல் குறித்து ஜமாலிடம் வாக்குமூலம் பதிவு செய்ய காத்திருக்கிறார்கள்.
இதனிடையே, பெர்சே 5 பேரணி நடைபெறுமானால் 1969 மே கலவரம் மீண்டும் நடக்கும் என்ற இணையத்தளப் பதிவு குறித்தும் சுங்கை புசார் அம்னோ தலைவரிடம் விசாரணை செய்யப்படும் என இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் அறிவித்துள்ளார்.
ஆனால், ஜமால் தாம் அப்பதிவை இடவில்லை என்று மறுத்திருக்கிறார்.
பிரதமரின் கைவண்ணத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில் அனைவரும் திறம்பட நடிக்கின்றனர். கடவுள், உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக !
நான்கு நாள்கள் தடுத்துவைத்து வருங்காலங்களில் மஞ்சள் சட்டைக்கு எதிராக என்ன என்ன செய்ய வேண்டும் என்று பாடம் நடத்துவதற்காக இருக்குமோ? ஜமால் நீங்கள் சரியான ஜில்! ஜில்!
இந்த கைது வெறும் கண் துடைப்பு….
“BANDUAN ISTIMEWA” BEBAS KELUAR MASUK PENJARA – ABDULLAH ANG போல இவர்களுக்கும் இச்சலுகை வழங்கபட்டாலும் ஆச்சர்யம் எதுவும் இல்லை.