பார்டி வாரிசான் சாபா (வாரிசான்) தலைவர் ஷாபி அப்டால், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள ‘ஹுடுட்’ தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை என்று கூறினார்.
“நான் வாக்களிக்க மாட்டேன், அதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்”, என்று ஷாபி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இவ்விசயத்தில் சரவாக்கின் நிலைப்பாடே தம் கட்சியின் நிலைப்பாடுமாகும் என்று ஷாபி கூறினார்.
சரவாக் ஷியாரியா நீதிமன்றத்தைத் திருத்தி அமைப்பதற்காக ஹாடி கொண்டுவரும் தனிநபர் சட்டவரைவை ஆதரிக்கப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்துள்ளது.