குளிர்காலத்தில் இந்தியப் பெருங்கடலில் வானிலை மோசமாக இருக்கும் என்பதால் மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானத்தைத் தேடும் பணி இரண்டு மாதங்கள்வரை தாமதமாகலாம் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அந்த போயிங் 777, 2014 மார்ச் மாதம் 239 பயணிகளுடன் கோலாலும்பூரிலிருந்து பெய்ஜிங் பறந்து கொண்டிருந்தபோது மாயமாக மறைந்தது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக அதைத் தேடும் பணி இந்திய பெருங்கடலில் நடைபெற்று வருகிறது.
120,000 சதுர கிலோமீட்டர்(46,000 சதுர மைல்) பரப்பளவில் அது விழுந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டு அப்பகுதியில் தேடும் பணிகள் நடந்து வருகின்றன. 2016 இறுதிக்குள் தேடும் பணியை முடித்துக்கொள்ளலாம் என மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகளின் அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், “தென் மண்டலத்தில் வானிலை மோசமாக இருப்பதால் சம்பந்தப்பட்ட பகுதி முழுக்க தேடி முடிக்க 2017 ஜனவரி/ பிப்ரவரி ஆகலாம்”, என அவர்களின் அறிக்கை ஒன்று கூறியது.
ஆகாய விமானப் போக்குவரத்து வரலாற்றில் இதுவே செலவுமிக்க தேடலாக அமைந்துள்ளது. இதுவரை 110,000 சதுர கிலோமீட்டரில் (42,500 சதுர மைல்) தேடும் பணியை முடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதைத்தேடுகிறோம், அதைத்தேடுகிறோம் என்று சொல்லிக்கொண்டே அவரவர் சட்டைப்பையை நிறைப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்னுமாடா தேடுகிறீர்கள்.கிடைக்கும் ஆனால் கிடைக்காது.அப்படித் தானே,
தேடுகிறீர்களோ, தேடவில்லையோ எங்கள் பாக்கட்டைத்தான் காலி செய்கிறீர்கள்!
MH370 தேடும் பணி இரண்டு மாதங்கள் தாமதமாகுவதற்கு வானிலைதான் காரணமா ? அல்லது தேடும் பணிக்கான மலேசியாவின் நன்கொடை கிடைக்காதது காரணமா ?