டாக்டர் மகாதிர் முகம்மட் தம் அறிவீனத்தைக் காண்பித்துக் கொள்ளாமல் வாயை மூடிக் கொண்டிருப்பதே நல்லது எனச் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் கூறினார்.
அரசாங்கத்திடம் பணமில்லை அதனால் 2017 பட்ஜெட் அர்த்தமற்றது என்று மகாதிர் கூறியிருப்பதற்கு நஸ்ரி இவ்வாறு எதிர்வினை ஆற்றியுள்ளார்.
“அரசாங்கத்திடம் பணம் இல்லை என்றால் அடுத்த ஆண்டு நாட்டை எப்படி ஆட்சி செய்வது?”, என இன்று பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் தம்மைச் சந்தித்த செய்தியாளர்களிடம் நஸ்ரி வினவினார்.
“தயை செய்து அவரை வாயை மூடிக் கொண்டிருக்கச் சொல்லுங்கள்”, என்றாரவர்.
அவர் வாயைத் திறந்து தம் முட்டாள்தனத்தை உறுதிப்படுத்துவதைவிட வாயை மூடிக் கொண்டிருப்பதே மேல் என்றாரவர்.
அவன் ஆட்சியில் இருக்கும் பொது அவனை தூக்கோ தூக்கு என்று தூக்கி விட்டு இப்போது பேச்சை பார்? கொள்கை இல்லா ஈனங்கள். அப்போது சப்பியதை மறந்தாச்சோ?
அவர் அப்போது பூமிபுத்தரா! இப்போது அவர் காக்கா! அப்போது பூமிபுத்ராவுக்கு உள்ள மரியாதை! இப்போது காக்காவுக்கு உள்ள மரியாதை!
மகாதீர் வாயை பொத்திக்கொண்டாள் , இவனெல்லாம் அறிவாளி ஆகி விடுவானா? நாட்டை வறுமைக்கு தள்ளிவிட்டு ,ஆணவப்பேச்சுக்கு பஞ்சமில்லை .
மாமா மகாதிர் தம் அறிவீனத்தை காண்பித்து தமது முட்டாள்தனத்தை உறுதிப்படுத்தினால் நஜிப்புக்கு ஆதாயம்தானே ஏன் வாயை மூடி கொண்டிருக்க சொல்கிறீர்கள். நஜிப் கூட இருந்து நஜிப்புக்கே குழி பறிக்கிற வேலையை இன்னும் தீவிரமாக செயல்படுத்துங்கள். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.