அமெரிக்காவில் தற்போது கடும் நிறவெறி நிலவிவருகிறது!

black-man-arrest

அமெரிக்காவில் தற்போது கடும் நிறவெறி நிலவிவருகிறது. பல இடங்களில் கறுப்பு இன இளைஞர்களை வெள்ளை இனப் பொலிசார் தேவை இல்லாமலே சுட்டுக் கொலை செய்தார்கள். மேலும் சில பொலிசார் அடித்து உதைத்தார்கள். நேற்று முன் தினம் இடம்பெற்ற சம்பவம் மேலும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. றோட்டில் பாதசாரிகள் நடக்கும் இடத்தில் நடந்து சென்றுள்ளார் கறுப்பின இளைஞர். ஆனால் நடைபாதையில், தடை இருந்துள்ளது. அருகில் கட்டப்படும் கட்டடம் ஒன்றிற்காக நடைபாதையின் சில தூரத்தை அவர்கள் தடைசெய்து இருந்தார்கள். இதனால் அவர் றோட்டில் இறங்கி நடக்கவேண்டி இருந்தது.

ஆனால் றோட்டில் நடப்பது வானங்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி, வெள்ளை இனப் பொலிஸ்சார் ஒருவர் அவரைக் கைதுசெய்துள்ளார். அதிர்ச்சியடைந்த கறுப்பின இளைஞர் பொலிசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று கூறி அவரைக் கைதுசெய்துள்ளார்கள் பொலிசார். இதனை மோபைல் போனில் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இதுவே தற்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

-http://www.athirvu.com