சிவப்புச் சட்டை இயக்கத் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ், பெர்சேமீது போர் தொடுக்கப்போவதாக அறிவித்திருப்பதை “வெறும் வாய்ச்சொல்”தான் என்று நினைக்கிறார் இஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார்.
அதை ஒரு அச்சுறுத்தல் என்று நினைப்போர் தாராளமாக போலீசில் புகார் செய்யலாம் என்றார்.
“அதை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்துள்ளது. வாய்ச் சொல்லுக்க்கு வாய்ச் சொல்லாலேயே பதில்கூறி விடலாம்”, என காலிட் கூறினார்.
நேற்று போலீஸ் காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜமால், பெர்சேயைத் தாக்குவதற்கு நாடு முழுவதிலுமிருந்து ஆள்களைத் திரட்டப்போவதாக அறிவித்திருந்தார்.
ஜாமாலை இரண்டு-நாள் காவலில் வைப்பதாகக் கூறிவிட்டு முன்கூட்டியே விடுவித்தது ஏன் என்று காலிட்டிடம் வினவப்பட்டது.
போலீசார் விசாரணையை முடித்து விட்டார்கள். அதனால் அவரை மேலும் காவலில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை எனப் பதிலிறுத்தார் அவர்.
நெருப்புனா சுட்டு விடவா போகிறது. அதனால் இனி எந்த அரசியல்வாதிகளையும் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளையும் (IGP உட்பட) அசிங்கமாக கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டலாம் ஏனென்றால் அதுவும் ‘வெறும் வாய்ச்சொல்தானே’ என்று நடவடிக்கை மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.
பிறகு ஏன் பல வாய்ச்சொல் எல்லாம் நீதி மன்றம் எறியுள்ளது . அறிவீனம் , திசை திருப்பும் பேச்சு .
நான் நினைக்கின்றேன், இவர் வேறு வழியாக உணவை உண்டு, கழிவை வாய் வழியாக வெளியேற்றுகின்றார் போலும். ஜீரணம்… தலைகீழ் !
நான் பலமுறை குறிப்பிட்டதுபோல நல்ல திறமையுள்ள, அறிவு, சிந்தனை, செயல்முறையுள்ள, உண்மையிலயே படித்து முன்னேறி, படிப்படியாக முன்னேறி, மதம் ,இனம் பார்க்காத, இலஞ்சம் பெறாத போலீஸ்படை தலைவர் இருந்தாலே நாடு உருப்படும், மக்களும் பாதுகாப்பாக வாழ வழி பிறக்கும்.
போலீஸ் படை என்ன எந்த அரசாங்க வேலைகளிலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை கூட லஞ்சம் வாங்க வைத்து விடுகிறார்கள். அப்படி லஞ்சம் வாங்க வில்லையென்றால் பதவி உயர்வு கிடைப்பதிலிருந்து ஓரங்கட்ட படுகிறார்கள். அதனால் கூட்டத்தோடு கூட்டமாக கோவிந்தா போட்டு கொண்டு காலத்தை ஓட்ட வேண்டியிருக்கு. எங்கள் அலுவலகத்தில் 3 பேர் இந்தியர்கள் மற்ற அனைவரும் மலாய்க்காரர்கள். அவர்கள் குத்தகையாளர்களிடம் RM 50 வாங்கினால் நாங்கள் RM 10-தாவது வாங்க வேண்டும் என்பது வாய் மொழி உத்தரவு.
மற்றவர்கள் சொன்னால் உடனே நடவடிக்கையில் இறங்கிவிடுவது உங்கள் காவல் துறை.அம்னோ சொன்னால் அது வெறும் வாய்ச்சொல்தானா ? இதுதான் சத்து மலேசியா கோட்ப்பாடோ ?
ஐயா சிவலிங்கம் அவர்களே- இது அவன் களுக்கும் தெரியும் ஆனால் தெரியாது– அத்துடன் இப்போது உள்ள அதிகாரிகள் யாவரும் மக்கள் பணத்தில் பேருக்கு பட்டம் பெற்றவர்கள்– தகுதி எல்லாம் திறமை எல்லாம் தேவை இல்லை. kulitfication தான் முக்கியம்.
Police shouldnt be scared of this ‘Red Shirt Gang’.
ஸுனர் என்ற கார்டூன் வரைபவரை ராப்பகலாகா துரத்தும் போலீஸ் படை தலைவர்கள், வன்முறையை தூண்டும், மற்றும் போர் குற்றங்களுக்கு நிகராக சவால் விடும் மூதேவிகளை கண்டு அஞ்சுவது ஏன்?