சைவ உணவு பழக்கம் உள்ளவர்கள் ராணுவத்தில் சேர முடியாதா?

swissசுவிட்சர்லாந்து நாட்டில் சைவ உணவு பழக்கம் கொண்ட நபரை ராணுவத்தில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறபித்துள்ளது.

சுவிஸில் உள்ள Lausanne நகரை சேர்ந்த Antoni Da Campo என்பவர் கடுமையான சைவ உணவு பழக்கம் கொண்டவர்.

இதுமட்டுமில்லாமல், விலங்குகள் நல அமைப்பான PEA-வில் அவர் உறுப்பினராகவும் உள்ளார்.

இந்நிலையில், ராணுவத்தில் சேர அவர் விண்ணப்பம் செய்துள்ளார். ராணுவ அதிகாரிகள் மேற்கொண்ட அனைத்து பரீட்சைகளிலும் அவர் தெரிவு செய்யப்பட்டார்.

இருப்பினும் ‘வாலிபர் ராணுவத்தில் சேருவதற்கு தகுதி இல்லாதவர்’ எனக் கூறி கடந்த டிசம்பர் மாதம் அவர் நிராகரிக்கப்பட்டார்.

‘வாலிபர் சைவ உணவு பழக்கத்தை கடுமையாக பின்பற்றி வருகிறார் என்றும், ராணுவ வீரர்கள் அணியும் தோல் காலணிகளை அவர் அணிய மறுக்கிறார்’ எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

எனினும், ராணுவ அதிகாரிகளின் இம்முடிவு மனித உரிமைகளுக்கு எதிரான முடிவு எனக்கூறி வாலிபர் கடந்த மார்ச் மாதம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, ‘ஒருவரின் உணவு பழக்கத்தை அடிப்படையாக கொண்டு அவரை ராணுவத்தில் சேர்க்க மறுப்பது அவருடைய அடிப்படை உரிமைகளை பறிப்பது போல் உள்ளது’ என நீதிமன்றம் கண்டித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த கருத்தை தொடர்ந்து சைவ உணவு சாப்பிடும் அந்நபரை ராணுவத்தில் சேர தகுதியானவர் என அறிவிக்க தயார் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.

-http://news.lankasri.com