அரசாங்கத்தை ஆதரிக்காவிட்டால், பதவி விலகுங்கள், ஜாசா சொல்கிறது

 

govtmenresignஅரசாங்க ஊழியர்கள் அரசாங்கத்தை ஆதரிக்காவிட்டால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சிறப்பு விவகாரங்கள் இலாகாவின் (ஜாசா) வியூகத் தொடர்புத்துறை இயக்குநர் துன் பைசால் இஸ்மாயில் அஸிஸ் கூறினார்.

“நீங்கள் அரசாங்கத்தை ஆதரிக்கும் ஒரு நல்ல அரசு ஊழியராக இருக்க முடியாது என்றால், தயவு செய்து ராஜினாமா செய்யுங்கள்.

“அவர்களின் இடத்தை நிரப்புவதற்கு பலர் இருக்கின்றனர்” என்று அவர் டிவிட் செய்துள்ளார்.

2017 பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்புச் சலுகைகளையும் பட்டியலிட்டுள்ளார்.