வெளியுறவு அமைச்சர் அனிபா அமினுக்கு எதிரான அவதூறு வழக்கு தொடர்பில் முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் செய்திருந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்த முறையீட்டு நீதிமன்றம் வழக்குச் செலவாக ரிம100,000 கொடுக்கும்படியும் அவருக்கு உத்தரவிட்டது.
அம்முறையீட்டை விசாரித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழுவுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி உமி கல்சோம் அப்துல் மஜிட், “செலவுத்தொகயுடன் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று தீர்ப்பளித்தார்.